30/04/2012

திராவிடமும் தமிழும் ஆரியமும்

707

அனைவருக்கும் வணக்கம் நமது தமிழகத்தில் தமிழ், சமஸ்கிருதம், மற்றும் நமது தர்மத்தின் அடிப்படையான வேதம், ஆகமம் ,திருமுறைகள் ஆகியவற்றைப்பற்றிய மாறுபட்ட கருத்துக்கள் அலசப்படுகின்றன. இங்கு, சிலர் திரும்பதிரும்ப வலியுறுத்தி நிறுவ விரும்புவது.

1) தமிழர் வேறு ஆரியர் வேறு
2) தமிழும் சமஸ்கிருதமும் பகை மொழிகள்
3) தமிழ் சான்றோர்கள் சமஸ்கிருதத்தைப் புறக்கணித்தனர்
4) சமஸ்கிருதத்தில் உள்ள வேத நெறியும் தமிழர்களுடைய வாழ்வியல் நெறியும் மாறுபட்டவை
5) தமிழர்களுக்கென்று (தமிழ்பேசும் ஹிந்துக்களுக்கு மட்டும்) தனிப்பட்ட வேதம் உள்ளது

என்பதுபோன்ற ஆதாரமற்ற கற்பனைகளைத்தான்

1) தமிழர் வேறு ஆரியர் வேறு

உண்மையிலேயே நமது தமிழ் அன்பர்கள் சிலர் சமஸ்கிருதம் அயலர்மொழி என்றும் இந்தியாவில் ஆரியர் திராவிடர் எனும் இரு இனங்கள் உள்ளன என்றும் இதில் ஆரிய இனம் திராவிட இனத்தை அடிமைப்படுத்தியது என்றும் நம்புகின்றனர்.

இந்த நம்பிக்கைக்குக் காரணம் நமக்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட பொய் வரலாறு. இந்தப்பொய் உறுதியான பல ஆதாரங்கள் மூலம் தகர்க்கப்பட்டும் இன்னும் நமது புத்தகங்களில் மாற்றப்படாமல் உள்ளது. அதற்குக்காரணம் நமது நாட்டை ஆளும் காங்கிரசும் , இந்துக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்துவிடுவார்களோ என்று அஞ்சும் இடதுசாரிகளும், சுயநலவாதிகளான நாத்திகவாதிகளும், மொழிப்பற்றையும், இனப்பற்றையும் திசைதிருப்பி பிழைப்புநடத்தும் திராவிட கட்சிகளும் அவர்களுக்குப் படியளந்த ,அளக்கும் தோழர்களான கிருத்துவ மிஷனரிகளும் தான்.

இந்தப் பொய்பிரச்சாரத்தின் வேர் ஜெர்மானியர்களின் இனப்பெருமிதம் எனும் கோட்பாட்டில் ஆரம்பித்து பிரித்தாளுவதற்காக ஆங்கிலேயரால் வளர்க்கப்பட்டு, இன்று சுயநலத்துக்காக, ,திராவிடரை முன்னேற்ற கடலில் விழுவதாகக் கூறுபவர்கள் முதற்கொண்டு நாத்திகவாதிகள் மிஷனரிகள் என்று பலதரப்பட்ட தன்னலவாதக் கும்பல்களால் பேணப்படுகிறது. இதற்கு சில அப்பாவி ஆன்மீகவாதிகளும் பொதுமக்களும் பலியாகிவிடுவதுதான் மிகப்பெரிய வேதனை.
மேலும் தெரிந்துகொள்ள

The Myth of Aryan Invasion theary
Death of Aryan invasion theary
Aryan Invasion — History or Politics?

இந்த ஆரிய திராவிட பிரிவினையை தமிழகத்தில் இருந்தவர்கள் அரசியல் ஆதயத்துக்காகப் பயன்படுத்திக்கொண்டனர் தமிழரிடம் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தினர் அவர்கள் தம்மை தமிழினக் காவலர்களாகக் காட்டிக்கொண்டனர்.( தமிழைக்காட்டுமிராண்டி மொழி என்று சொன்னவரை வெட்கம்கெட்டுதந்தைஎன்று சொல்லுவது அறிவுடைமை! தன்மானம்! முலையிலிருந்து தீ வைத்து எரித்தாளாம்! கற்புக்கரசியாம்! முட்டாள் பெண்பிள்ளை! இது கண்ணகிக்கு ஈ.வே.ரா கொடுத்த வெகுமதி )

அந்த தாழ்வுமனப்பான்மையின் வெளிப்பாடுதான்

// ஆரியர்களுக்கு தயிர், மோர், வெண்ணை எல்லாம் தெரியாது அதற்குபதிலாக சாணத்தையும் கோமியத்தையும் பஞ்சகாவ்யத்தில் சேர்துவிட்டனர்// 

// அகத்தியர் ஆரியன்,அவர் தமிழைத் திருடினார்//

என்பதுபோன்ற எண்ணற்ற பிதற்றல்கள்,

உண்மை என்னவென்றால் சமஸ்கிருதம் ஒரு இனத்தின், ஜாதியின் மொழி அல்ல.

2) தமிழும் சமஸ்கிருதமும் பகை மொழிகள்

எக்காலத்திலும் மொழிகள் தானாக கத்தியெல்லாமெடுத்து சண்டைப்போடா. இனங்களுக்குள் நடக்கும் மோதலில் மொழிகளின் ஆதிக்கம் வரலாம் இங்கு சமஸ்கிருதம் பொது மொழியாகவே இருந்துள்ளது இந்திய மொழிகள் அனைத்துடனும் கலந்துள்ளது. அனைத்து இனத்தவரும் அப்பொதுமொழியை வளப்படுத்தி உள்ளனர். ஆகவே இக்கருத்து பொய்யானது.

3) தமிழ் சான்றோர்கள் சமஸ்கிருதத்தைப் புறக்கணித்தனர்

நாத்திகர்களின் பொருளற்றவாதம் எடுபடாதநிலையில் ஆத்திகர்களின்போர்வையில் நடத்தும் பொய்ப்பிரச்சாரம் இது

முதலில் தமிழ் உயர்ந்தது என்பார்கள், அதற்கு ஆதாரமாக சமய ஆன்றோர்கள் தமிழை சிறப்பித்துக் கூறியதைப்போட்டுவிட்டு. பார்த்தீர்களா அவர்கள் வடமொழியை புறக்கணித்தனர் என்பர். அவர்கள் அவ்வாறு வடமொழியைத் தள்ளவில்லையே என்று கேட்டால் நம்மை வடமொழி ஆதரவாளன் என முத்திரை குத்தி வாதத்தை திசைதிருப்புவர். 

சான்றோர்கள் வேதம் முதலான சமஸ்கிருத நூல்களின் சிறப்பை கூறும் பாக்களை மேற்கோள் காட்டினால் அவர்கள் கூறியது மறை, மறைவேறு வேதம் வேறு என்பர் பிறகு // வேதம் தமிழ்வார்த்தை// என்பார்கள் அதற்க்குப் பொருத்தமில்லாத இலக்கணமும் எழுதுவார்கள். யாராவது பகுத்தறிவோடு கேள்விகேட்டால் வசைமாரிதான். ஆனால் கேட்ட கேள்விகளுக்கு பதில்கள் மட்டும் வரவே வராது. உண்மையில் தமிழை அழிப்பவர்கள் யார் என்று அனைத்து தமிழரும் தம்மைத்தாமே கேட்டுக்கொண்டால் நல்லது. "அவலை நினைத்து உரலை இடிப்பது" என்பது இதுதான்.

4) சமஸ்கிருதத்தில் உள்ள வேத நெறியும் தமிழர்களுடைய வாழ்வியல் நெறியும் மாறுபட்டவை
5) தமிழர்களுக்கென்று (தமிழ்பேசும் ஹிந்துக்களுக்கு மட்டும்) தனிப்பட்ட வேதம் உள்ளது


கடைசியாக இங்குவந்து நிற்பார்கள் இதன் பிண்ணனி தமிழரை மற்ற ஹிந்துக்களிடமிருந்து பிரிப்பது இதற்குத், தலைவர்கள்,, பகுத்தறிவு பகலவன்கள் என்று நாத்திகவாதிகளை துணைக்கு வைத்துக்கொள்வார்கள். இந்த இடம்தான் சாயம் வெளுத்து வேடம் வெளிப்படுமிடம். திருமுறைகளுக்கும் நாத்திகர்களுக்கும் என்ன தொடர்பு. அவர்களை பந்திக்கே கூப்பிடவில்லை இங்குவந்து இலைஓட்டை என்றால்எப்படி?

ஆன்மிக அன்பர்களுக்கு நாம் விடுக்கும் வேண்டுகோள் "நாம் அனைவரும் உயர்ந்த ஞான பரம்பரையின் வாரிசுகள், அதன் மூலம், இந்தியாவெங்கும் பரவி இருக்கிறது. வேதமும் வடமொழியும் நமது சொந்த சொத்துகள், இந்த உண்மையை மறக்கவேண்டாம்" நமக்கு இங்கு வீரத்துறவி விவேகானந்தர் நல்லதொரு வழிகாட்டி.

வானவன்காண் வானவர்க்கு மேலா னான்காண்
வடமொழியுந் தென்றமிழும் மறைகள் நான்கும்
ஆனவன்காண் ஆனைந்தும் ஆடி னான்காண்
ஐயன்காண் கையிலனல் ஏந்தி யாடும்
கானவன்காண் கானவனுக் கருள்செய் தான்காண்
கருதுவார் இதயத்துக் கமலத் தூறும்
தேனவன்காண் சென்றடையாச் செல்வன் றான்காண்
சிவனவன்காண் சிவபுரத் தெஞ்செல்வன் தானே.- திருச்சிவபுரம்

(நால் வேதங்களாகவும்,வடமொழியும்,தமிழுமாகவும்இறைவன் உள்ளான் எனக்கூறும் பாடல் இது)


மூரி முழங்கொலிநீ ரானான் கண்டாய்
முழுத்தழல்போல் மேனி முதல்வன் கண்டாய்
ஏரி நிறைந்தனைய செல்வன் கண்டாய்
இன்னடியார்க் கின்பம் விளைப்பான் கண்டாய்
ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்
அண்ணா மலையுறையெம் அண்ணல் கண்டாய்
வாரி மதகளிறே போல்வான் கண்டாய்
மறைக்காட் டுறையும் மணாளன் தானே.-திருமறைக்காடு

(இறைவன் ஆரியனாக,அதாவது மிகவும் உயர்ந்தவனாக இருக்கும் அதேசமயம் தன்னைஒத்தவனாகவும் இருக்கும் தன்மையைத் திருநாவுக்கரசர் விளக்கிக் கூறும் பாடல் இது)


மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேனா ரமுதே சிவபுரனே
பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே-திருவாசகம்

இப்பாடல்களை நன்றாக ஆராய்ந்தால் மேற்கண்ட உண்மைகள் விளங்கும்.

No comments:

Post a Comment