22/04/2012

இஸ்லாமியர்களின் இந்திய படையெடுப்பு – வரலாறுகாணாத பேரழிவுBattle-of-Karnal1-798x1024
பாரசிக ஆக்கிரமிப்பாளன் நாதிர்ஷாவுடன் நிகழ்ந்த கர்ணல் போர்
இந்திய வரலாற்றில் படுகொலைகள் அரக்கர்களால் நிகழ்த்தப்பட்டதாக புராணங்களில் காணலாம்,ஆனால் அவை அனைத்தும் விரைவாக நிறுத்தப்பட்டுவிட்டன காரணம் நீதியின் மீதும் தெய்வத்தின் மீதும் நம்பிக்கைகொண்ட வீரர்களும்,ஆற்றல் மிக்க அவதார புருஷர்களும் தோன்றி அவர்களை அழித்துவிட்டனர்.அதன்பிறகு இந்திய வரலாற்றில், இந்தியாவில் இருந்த அரசுகளுக்கிடையே நடந்த போர்களில்கூட எதிலும் திட்டமிட்டு, ஏதுமறியா பொதுமக்கள் பெருமளவில் கொல்லப்பட்டதாக எந்த ஒரு தகவலும் இல்லை.
பேரரசர்களாக இருந்தாலும் அப்பாவிகளைக் கொல்ல அவர்கள் அஞ்சினர். அசோகரது வாழ்க்கையில்கூட மனித அழிவு என்பது போர்க்களத்தில் போர்வீரர்களிடையேதான் நிகழ்ந்தது.  அப்பாவிப் பொதுமக்கள் நேரடியாகப் பாதிக்கப்படவேயில்லை. ஆனால் அதற்கே மனம்வருந்தி அசோகர் போரிடுவதை விடுத்து அமைதியை விரும்பி புத்தமதத்தைத் தழுவினார்.
நமது மக்களின் தன்மை அத்தகையது.இது நாம் அனைவரும் பெருமைகொள்ளத்தக்க ஒன்று. ஆனால் இதன் பின் விளைவாக நமது மக்கள் “ரொம்ப நல்லவிங்களா” மாறியதன் விளைவு 712CE ல் அரேபிய கலீபாக்களின் தளபதி முகமது பின் காசிம் தலைமையில் அரேபியர்கள் இந்தியாமீது படையெடுத்து இந்நாட்டின் மேற்குப்பகுதியைக் கைப்பற்றினார்கள் (அப்பொழுது நம்மைப் பிடித்த துன்பம் இன்னும் மும்பையில் படுகொலை நடத்திய அஜ்மல் கசாப் வரை தொடர்கிறது). அதன்பின் நமது நாட்டை கொள்ளைஅடிக்கவும் மதத்தைப் பரப்பவும் 1000 CE வாக்கில் படையெடுத்துவந்து  முஹமது கஜினி தொடங்கிவைத்த வேட்டை, நாதிர்ஷா படையெடுத்துவந்து டெல்லியை நிர்மூலமாக்கிய 1739 CE  வரை 700 ஆண்டுகாலமாகத் தொடர்ந்து நிகழ்ந்தது
இந்த காலகட்டத்தில் பெரும் இன்னலுக்கும் அழிவிற்கும் ஆளானது மன்னின் மைந்தர்களான ஹிந்துமக்கள்தான். இக்காலகட்டத்தில் முஸ்லிம் ஆட்சியாளர்களால் எண்ணிலடங்காஹிந்துக்கள்,  கொல்லப்பட்டனர்,மதக்காரணங்களால் கொடுமைப்படுத்தப்பட்டு உயிர்துறந்தனர்,மதமாற்றம் செய்யப்பட்டனர்.
வரலாற்று ஆசிரியர்களான,K.S.லால்,Koenraad Elst  ஆகியோரின் கருத்துக்களின்படி சுமார் 20 கோடி ஹிந்துக்கள் இக்காலகட்டத்தில் கொல்லப்பட்டுள்ளனர்
நாதிர்ஷா டெல்லியை சூறையாடி அங்கு கொல்லப்பட்ட ஹிந்துக்களின் தலைகளை மலைபோல் குவித்துவைத்தான்.பாபர், ரஜபுத்ர மன்னன் ராணா சங்காவைத் தோற்கடித்தபோதும் இதையே செய்தான். 1568CE ல் சித்தூரைக் கைப்பற்றி 30,000  ரஜபுத்திரர்களைப் படுகொலை செய்த அக்பரும் அதற்கு விதிவிலக்கல்ல. தென்னகத்தை ஆண்ட பாமினி சுல்த்தான்களும் இதையே செய்தனர். 1311CE ல் மதுரை மீது படைஎடுத்த மாலிக் காபூர் மதுரை, திண்டுக்கல் பகுதிகளில் செய்த கொடுமைகள் கொஞ்சநஞ்சமல்ல
உலகில் எங்கும், இத்தகைய கொடுமைகள் புரிந்தவர்களை மக்கள் மன்னித்ததில்லை. ஜெர்மனியில் ஹிட்லரையும் நாஜிகளையும் ஜெர்மானியர்கள் மன்னிக்கவில்லை, அவர்கள் புரிந்த கொடுமைகளை மறக்கவுமில்லை,மீண்டும் அவை நிகழாவண்ணம் பார்த்துக் கொள்கின்றனர்.அங்கு யாரும் ஹிட்லரை மாவீரன் என்று கொண்டாடுவதில்லை.தேசியவாதியாகப் பார்ப்பதில்லை,மாபெரும் நிர்வாகி எனப் பாராட்டுவதில்லை
ஹிட்லரைக் கதாநாயகனாக்கி, டூயட் பாடவிட்டு ஹிட்லரின் காதலி ஹிட்லருக்காகத் தாரைதாரையாக கண்ணீர் விடும் காட்சிகள் கொண்ட திரைப்படங்களை எடுத்து, மக்களையும் அழவைத்து வரலாற்றையும் குழப்பும் காரியத்தை எந்த மேல் நாட்டுக்காரரும் செய்வதில்லை. மாறாக ஹிட்லராலும் அவனது கொள்கைகளாலும் மக்கள்பட்ட துன்பங்களைப் பற்றியும், அவனது கொடுமைகளைப் பற்றியும் பல படங்களை எடுத்து இளம் தலைமுறையினருக்கு விளிப்புணர்வூட்டி அதேபோல் தவறு மீண்டும் நிகழாமல் பார்த்துக் கொள்கின்றனர். அவற்றைப் பார்ப்பதால் ஜெர்மானியர்கள்மீது வெறுப்பு ஏற்பட்டுவிடும் என்று யாரும் நினைப்பதுமில்லை, அவ்வாறு எதுவும் நிகழ்வதுமில்லை மாறாக அத்தகைய குற்றங்களுக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுகிறது
நமது நாட்டில் நிலைமை தலைகீழாக உள்ளது,தமது முன்னோர்களுக்கு என்ன நேர்ந்ததென்றே பெரும்பாலான இந்தியர்களுக்குத் தெரியாது,பெரும்பாலான இந்திய வரலாற்றாசிரியர்கள் இந்த விசயம்பற்றிப் பேசவே அஞ்சுகின்றனர்.
நமது முன்னோர்கள், அலெக்ஸாண்டர் போன்ற எத்துனையோ ஆக்கிரமிப்பாளர்களைத் துரத்தி அடித்தவர்கள், ஆனால் இடைக்காலத்தில் தமக்குள் ஏற்பட்ட சிறு சிறு சச்சரவுகளாலும், ஒற்றுமை இன்மையாலும்,விழிப்புணர்வு இல்லாததாலும் தம் தலையில் தாமே மண்ணை வாரிப் போட்டுக் கொண்டனர்.அதே நிலை நமக்கும் வந்து விடக்கூடாது
நாம் இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறோம், முஹல்-இ-அஜம், அனார்கலி, தாஜ்மஹல் என படமெடுத்து கொடுமைக்காரர்களைக் கதாநாயகர்களாக்கிவிட்டோம். சீக்கிய குருவையும், சீக்கியர்களையும்,ஹிந்துக்களையும் கொன்றவர்களை சிறந்த நிர்வாகிகள் என்றும், கலா ரசிகர்கள் என்றும் கொண்டாடுகின்றோம்.  நடந்த கொடுமைகளைக் கூறுபவர்களையும், ஆக்கிரமிப்பாளர்களால் அழிக்கப்பட்ட புனித தளங்களைப் புதுப்பிக்கவேண்டும் என்பவர்களையும் நாஜிகள் என்கின்றோம்
நாம் பாதுகாப்புடன் வாழ, மங்கோலியர்களாலும்,பாரசீகர்களாலும் எப்படி டெல்லி இரவு பகல் பாராது திட்டமிடப்பட்டு சூறையாடப்பட்டது என்பதையும், முஸ்லிம் மன்னர்கள் அப்பாவி மக்கள் மீது மேற்கொண்ட கொடுமைகள் எத்தகையது என்பதையும், அவர்கள் அழித்த கோவில்கள் பற்றியும் அறிந்து கொள்ளவேண்டும். மதவேறுபாடின்றி அனைத்து தரப்பு மக்களிடமும்,  இதுபோன்ற செயல்கள் மனிதத்தன்மை அற்றவை ,செய்வதற்கு வெட்கப்படவேண்டியவை எனும் உணர்வை ஏற்படுத்த வேண்டும். மதசார்பின்மை எனும் பெயரால் சிறுபான்மை,பெரும்பான்மை என மக்களை பிளவுபடுத்தி குறுகிய அரசியல் ஆதாயத்துக்காக தேச ஒற்றுமையை குலைத்து நாட்டை பலவீனப்படுத்தும் போக்கைத் தடுக்கவேண்டும்.
மதவாதமும் பயங்கரவாதமும் யாருக்கும் பயன்தராது, ஜிகாதும் மதவெறியும் அண்டைநாடுகளை அழித்து வருவதைப் பார்த்துக் கொண்டுள்ளோம், அது காஃபிர்களை அழிப்பதாக ஆரம்பித்து தன்னைத்தானே அழித்துக்கொள்ளும் மடைமையாக முடியக்கூடியது. உண்மையான நல்வாழ்வு என்பது பிறமதத்தினரைத் தாழ்த்துவதிலோ, தன்னைமட்டுமே உயர்வாகக் கருதுவதிலோ இல்லை. அது சமுதாயத்தில் நாம் பேணும் சகோதரத்துவத்திலும் அன்பிலும்,பிறரை மதிப்பதிலும்,மனித மாண்புகளைப் பேணுவதிலும் தான் உள்ளது
பாரத சமுதாயம் வாழ்கவே! – வாழ்க வாழ்க!
பாரத சமுதாயம் வாழ்கவே! – ஜய ஜய ஜய
பாரத சமுதாயம் வாழ்கவே! – வாழ்க வாழ்க!
பாரத சமுதாயம் வாழ்கவே!
முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
முழுமைக்கும் பொது உடைமை
ஒப்பிலாத சமுதாயம்
உலகத் துக்கொரு புதுமை - வாழ்க!
பாரத சமுதாயம் வாழ்கவே! – வாழ்க வாழ்க!
பாரத சமுதாயம் வாழ்கவே! – ஜய ஜய ஜய
பாரத சமுதாயம் வாழ்கவே! – வாழ்க வாழ்க!
பாரத சமுதாயம் வாழ்கவே!

No comments:

Post a Comment