22/04/2012

யார் ஆரியன்?


வேதகால ஆரியர்கள் என்பவர்கள் ஒரு மக்கள் இனம் என பொதுவாகக் கூறப்படுகிறது உண்மையில் அது, ஒரு, முறையான, மக்களுக்கு உதாரணமாகக் காட்டத்தக்க, வாழ்கை வாழ்பவர்களைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட சமஸ்கிருத வார்த்தை ஆகும். உயர்ந்தகுணங்களுடைய,  உண்மையின் பாதையில் செல்லக்கூடிய, வாழ்க்கைக்குத் தெளிவானவழிகாட்டக்கூடிய, ஒருவரைக் குறித்துச் சொல்லவும் ஆரிய எனும் வார்த்தை பயன்படுத்தப்பட்டது
ஆரியனிஸம் அல்லது வேத நாகரிகம் என்பது ஒரு மதமோ,இனமோ அல்ல,  அது ஒரு வாழ்க்கைமுறை. அது அமைதி, மகிழ்ச்சி, அனைவருக்கும் நீதி,ஆகிய மதிப்பீடுகளை உயர்த்திப் பிடிக்கக்கூடிய ஒரு ஒழுக்க முறையைக் கொண்ட உயர்வான வாழ்க்கைக்காண வழி. இந் நாகரிகம் எந்த ஒரு தனிப்பட்ட நாட்டுக்கோ, இனத்துக்கோ,மதத்துக்கோ அல்லது ஜாதிக்கோ உரிமையான சொத்து அல்ல மாறாக மேற்கண்ட மதிப்பீடுகளுடன் மகிழ்ச்சியான,எளிய ஒழுக்கமுடைய வாழ்க்கை வாழவிரும்பும் உயர்ந்த எண்ணங்கள் கொண்ட ஒவ்வொரு மனிதனுக்குமானது.  ஆகவே இத்தகைய உயர்ந்த வாழ்க்கைவாழும், எவரும், அவர் எந்த இனம், மொழி அல்லது நாட்டைச் சார்ந்தவரக இருந்தாலும் அவர் வேத நாகரிகத்தைச் சார்ந்தவரே,அவரை ஆரியன் என அழைக்கலாம்.
ஒவ்வொருவருடைய தனிப்பட்ட ஆன்மிக உயர்வுக்கான தேடலிலிருந்தும் வேதநாகரிகத்துக்கான பாதை தொடங்குகிறது. தான் இந்த தூல உடல் மட்டும் அல்ல என தெளிதல், ஒருவருடைய பிறப்புக்கும் தற்போதைய நிலைக்கும், அது உயர்வானதோ அல்லது தாழ்வானதோ, ஆனந்தமானதோ அல்லது சிரமமானதோ, காரணமாக இருப்பது, தான் செய்த செயல்களே (வினைப்பயன்) என உணர்தல், மறு பிறப்பை நம்புதல், தான் தனது மனம்,மொழி, மெய் மூலமா ஆற்றும் நல்ல அல்லது தீய செயல்களுக்கு தக்கபடி விளைவுகளைப் பெறுகிறோம் என்பதை அறிதல் ஆகியன இப்பாதையில் தொடர்ந்து செல்ல துணைபுரிகின்றன.
இந்த உறுதியான ஆன்மிக புரிதலால் இனம், பால், எனும் வேறுபாடுகளைக் கடந்து அனைத்து உயிர்கள்மீதும் அன்பும் மதிப்பும் ஏற்பட்டுவிடுகிறது. இது ஒவ்வொருவரிடமும் அமைதி மற்றும் நேர்மையுடன் பிறரை அனுகவேண்டும் எனும் உணர்வை ஏற்படுத்துகிறது. மறுபிறப்பில் கொண்ட நம்பிக்கையோடு, இந்த உலகம் ஒரு விளையாட்டுத்திடல் போன்றது என்பதையும் வாழ்க்கை ஒரு விளையாட்டு என்பதையும் நாம் உணரும்போது, நமது மனம் நம்மால் இவ்வுலகிற்கு என்ன தர முடியும் என எண்ணுகிறது. நாம் பிறரது முன்னேற்றத்துக்கு குறிப்பாக ஆன்மிக முன்னேற்றத்திற்கு உதவுவது நம்முடைய வளர்ச்சிக்கு உதவக்கூடியது எனும் விழிப்புணர்வு ஏற்படும்போது அவ்வுணர்வு மொத்த சமுதாயத்தையுமே உயர்த்துகிறது.
இப்படிப்பட்ட தெய்வீக சமுதாயம் நிலைபெறுவதே இந்நாகரிகத்தின் நோக்கம். இதைச்செய்ய மக்களுக்கு தொடர்ந்த வழிகாட்டுதலும் ஊக்குவிப்பும் தேவைப்பட்டது, அதை ஞானிகள் தம் உயர்ந்த ஆன்மிக ஆற்றலாலும் ஞானத்தாலும் வழங்கினர் அவையே நான்கு வேதங்களும்,புராணங்களும் பிற நீதி நூல்களுமாகும்.
வேதநெறி நின்று வாழ்வாங்கு வாழ்வோமக.

No comments:

Post a Comment