22/04/2012

சமஸ்கிருதம்-திராவிடரின்மொழி


ஆரியர்கள், படையெடுப்பின்மூலம் (பிறகு குடியேற்றம் மூலம் என மாற்றிக்கொண்டனர்) இந்தியாவிற்குள் வந்தனர் எனும் கருத்துக்கு வக்காலத்து வாங்குபவர்கள் ஆரியர்களின் தனி அடையாளம் எனக் கூறுவது அவர்களது மொழி, அது சமஸ்கிருதம். அதைத்தவிர ஆரியர்களது அடையாளமாக வேறெந்த குறிப்பிட்ட பாரம்பரிய பண்பாட்டுக் கூறையோ அல்லது கலைச்சிறப்பையோ சிறப்பித்துக் கூறுவதில்லை.
இங்கு இந்த ஆய்வாளர்களின்(?) கூற்றில் உள்ள முக்கியமான முரண்பாடுகளைக் காணலாம். அவை எவையென்றால் அந்த காலகட்டத்தில் நாகரீகமற்ற நடோடிப் போராளிக்கூட்டமாகக் கூறப்பட்ட ஆரியர்களது மொழியான சமஸ்கிருதம் உலகின் மிகச்சிறந்த மொழிகளில் ஒன்றாக அனைத்து அறிஞர்களாலும் பாராட்டப்படுகிறது. அதன் ஒழுங்கமைப்பின் காரணமாக கம்ப்யூட்டர் பயன்பாட்டிற்கு உகந்தமொழியாகக் கருதப்படுகிறது. இங்கிலாந்தின்மீது பல்வேறு இனமக்களால் நடத்தப்பட்ட படையெடுப்பை அந்நாட்டின் மக்களது மொழியான ஆங்கிலத்தில் ஏற்பட்டுள்ள பிரெஞ்ச், ஜெர்மன், டேனிஷ், கிரீக் மற்றும் லத்தின் ஆகிய மொழிகளின் கலப்பு பிரதிபலிக்கிறது. ஆனால் ஆங்கிலத்தைப்போல் அல்லாமல் சமஸ்கிருதம் தன்னிறைவுடன் விளங்குகிறது.
மேலும் சமஸ்கிருதம் ஒழுங்கமைந்த தாளக்கட்டோடமைந்த இன்னிசை நயம் கொண்ட மொழியாக உள்ளது. அம்மொழி மிகவும் பழமையான சிறப்புத்தன்மைமிக்க இலக்கணத்தைக் கொண்டுள்ளது. அனைத்திற்கும் மேலாக அம்மொழியின் பொருட்செறிவு அம்மொழி நெடுங்காலமாக மேம்படுத்தப்பட்டு வந்துள்ளதை உணர்த்துகிறது.
இதன் பொருள் சமஸ்கிருதம் காட்டுமிராண்டிக்கூட்டத்தினரின் மொழி அல்ல மாறாக அது ஒரு பழமையான, பெருமைமிக்க சிறந்த கலாச்சாரம் கொண்ட மக்களின் மொழி என்பதாகும். இந்த சிறப்பான மொழி அத்தகைய சிறந்த கலாச்சார சூழலில்தான் உருவாகமுடியும். ஆகவே அக்காலகட்டத்தில் எந்தஒரு வெளியார் படையெடுப்பும் அக்கலாச்சாரத்தில் பாதிப்பு ஏற்படுத்தும் அளவில் நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை. அப்படி நிகழ்ந்ததாக எங்கும் எதிலும் எவ்வித குறிப்பும் இல்லை. அந்தகாலகட்டத்தில் இருந்த அத்தகைய கலாச்சாரம் ஹரப்பா கலாச்சாரமாகும்.
ஆகவே வரலாற்று ஆய்வாளர்கள் எனப்படுவோர் கூற்றுப்படி
ஹரப்பா நாகரிகம்-திராவிட நாகரிகம்,
ஆகவே
ஹரப்பா மக்களின்மொழி-சமஸ்கிருதம்
அப்படியானால்
திரவிடரின் மொழி – சமஸ்கிருதம்
திராவிடரின் தாய்மதம் சந்தேகமே இல்லை வேதமதம்(இந்து மதம்)
அல்லது
சமஸ்கிருதம் ஆரியர்மொழி என்றால்,ஹரப்பா நாகரிகம் ஆரிய நாகரிகம்
நல்லா யோசிச்சுக்கோங்க
நன்றி ; டாக்டர் டேவிட் ப்ராலே

No comments:

Post a Comment