28/04/2015

இறைவணக்கம்


ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே

எல்லாம்வல்ல இறைவனின் அருளை வேண்டிக்கொண்டு,உலக மேம்பாட்டுக்காக என்னற்ற தியாகங்ககள் புரிந்த தியாகசீலர்களின் நினைவுகளைப் போற்றும் வகையில் இவ்வலைப்பூ உருவாக்கப்பட்டு காணிக்கையாக்கப்படுகிறது

இங்கு,எனது உள்ளங்கவர்ந்த கருத்துக்களை,எங்கு காணிணும் எடுத்துத் தொகுக்கிறேன்,இவை அத்தியாகச் சுடர்களை அலங்கரித்து வைக்கப்பட்ட வண்ணமலர்த் தொகுப்பாக இருக்கட்டும்

மலரும், இலையும்,நாரும் மனிதன் படைப்பு அல்ல ஆனால் மாலையைத் தான் படைத்ததாகக் கருதுகிறான்,நான் எனது எண்ணங்களுடன் எல்லோருடைய ஆக்கங்களையும் தொடுத்துக் கொண்டுள்ளேன்,குற்றமிருப்பினும் வாழ்த்துங்கள். கருத்துக்களை அலசுவோம்,கண்ட உண்மை வழிகாட்ட, வாழ்க்கைப் பாதையில் நடைபோடுவோம்

“எல்லோரும் இன்புற்றிருப்பதல்லால் வேரொன்றறியேன் பராபரமே”

பாரதசமுதாயமும் தேசபக்தர்கடமையும்சிவசேனா எம்.பி சஞ்சைராவத் முஸ்லிம்களின் வாக்குரிமையைப் பறிப்பதுகுறித்து பேசியது இப்பொழுது வாதம், பிறதிவாதம், மழுப்பல்கள் என்று பரபரப்பான செய்தியாகிவிட்டது.  இந்து பெண்கள் ஒவ்வொருவரும் குறைந்தது நான்கு  குழந்தைகளைப்  பெற்றுக்கொள்ள வேண்டும் என்றுகேட்டுக்கொள்கிறேன், இது பா.ஜ.க எம்.பி சாக்ஷிமஹராஜ் அவர்களின் கருத்து. அவர் அதோடு நிற்கவில்லை அந்த 4 குழந்தைகளில் ஒன்றை சாதுவாகவும், மற்றொரு குழந்தையை தேசத்தைப் பாதுகாக்க ராணுவவீரனாகவும், மூன்றாவது குழந்தையை சமுதாயப் பணியாற்றும் தொண்டனாகவும் வளர்க்கச் சொன்னார், நான்கவது குழந்தை பெற்றவர்களைப் பார்த்துக்கொள்வதற்காகவோ என்னவோ அவர் அதைப்பற்றி ஏதும் சொல்லவில்லை. அதுதான் பிரச்சினை போலும், பா.ஜ.க தலைவர் அமித்ஷா அவர்கள் மஹராஜிடம்  விளக்கம் கேட்கும் அளவிற்க்கு மற்ற கட்சிகளெல்லாம் அவரது இந்தப்பேச்சை சர்ச்சைக்குரிய பேச்சாக்கிவிட்டன.
அவர் என்ன பிள்ளைகளைப் பெற்று, அப்பாவிகளைக் கொன்று குவிக்கும், பெண்களைக் கடத்தி விற்கும்தீவிரவாதியாக்குங்கள்  என்றா கூறினார்? நாட்டுக்காக தானே அனுப்ப சொன்னார்.  சாக்ஷி மகராஜ்கூறியதில் என்ன தவறு இருக்கிறது? இவர்களது பேக்சு வெற்று விளம்பரத்திற்காண பேச்சு அல்ல மாறாக ஆழ்மனதில் ஏற்பட்ட ஜாக்கிரதை உணர்வின் வெளிப்பாடு என்று கருத உறுதியான காரணங்கள் உள்ளன.
தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களால் இன்று உலகம் முழுவதும் ஒருகிராமமாக சுருங்கிவிட்டது. கிராமத்தின் எந்தமூலையில் எது நடந்தாலும் அது கிராமம் முழுவதையும் பாதிக்கும். அரேபியவசந்தம்(?)(ARAB SPRING) என்று சொல்லப்பட்ட, அரேபிய சர்வாதிகாரிகளுக்கெதிரான மக்கள் எழுச்சி இன்று அரபு உலகத்தை ரத்தக்களரியாக்கி இருக்கிறது. அரேபியர்கள் வெறித்தனமாக ஷியா,சன்னி என தங்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்திக்கொண்டு ஒருவரை ஒருவர் கொன்று குவித்துக்கொண்டுள்ளனர், அனைத்துதரப்பினரும் அல்லாவின் பெயரால் இந்த படுகொலைகளை செய்துகொண்டுள்ளனர்.
Militants from the al-Qaida-inspired Islamic State of Iraq and the Levant (ISIL) taking aim at captured Iraqi soldiers
அதிகார வெறியர்களின் அடக்குமுறைக்கு எதிரானதாக, மக்களின் எழுச்சியாகக் கருதப்பட்ட அரேபியவசந்தத்தின் வால்தான் தற்பொழுது மத்தியகிழக்கு ஆசியாவில் அக்கிரமங்களை அரங்கேற்றிவரும் ஐ.எஸ் அமைப்பு, இவர்கள் உலகளாவிய இஸ்லாமிய பேரரசை அமைக்க விரும்புகின்றனர். இவர்களை ஈரானின் தலைமையிலான ஷியாக்களின் கூட்டணிக்கெதிராக  சவூதியின் உதவியுடன் அமெரிக்க கூட்டணி உருவாக்கியது. இவர்களின் இஸ்லாமிய தேசம் எப்படியிருக்கும் என்பதையும், இவர்களது முன்னோடிகளான பழைய இஸ்லாமிய காலிஃபேட் எப்படி இருந்தது என்பதையும் இவர்கள் அரங்கேற்றிவரும் காட்டுமிராண்டித்தனத்தின்மூலம் நாம் எளிதில் உணர்ந்துகொள்ளலாம்.
  • இவர்களது பேரரசின் எல்லைக்குள் வாழும் பிற மரபுகளைச் சார்ந்த (இஸ்லாமில் சன்னிபிரிவைத்தவிர) மக்களை, ஒன்று, இவர்களைப்போன்ற இஸ்லாமியராக்குவது அல்லது கொலை செய்வது. நமது பாரதமும் இவர்களது இஸ்லாமிய தேச எல்லைக்குள் உள்ளது
  • பிற மரபுகளைச் சார்ந்த பெண்களை அடிமைகளாக வைத்துக்கொள்வது அல்லது சந்தையில் விற்றுவிடுவது ( இந்த பட்டியலில், குர்துக்கள்(இவர்களும் சன்னிதான்), யாசீதிகள், கிருஸ்துவர்கள் மற்றும் ஷியாக்களும் அடங்குவர்)
இதுதான் தற்போது இவர்களது லச்சியம்.
நம்முடைய பிரச்சினை என்னவென்றால் இணையம் வாயிலாக இவர்கள் தமது கொள்கைகளை பரப்புவதும், இங்குள்ள முஸ்லிம் இளைஞர்கள் அதன்மூலம் ஈர்க்கப்படுவதும்தான்.
இந்திய முஸ்லிம் இளைஞர்களை, ஜாகிர்நாயக்குகளும்(இவருக்கு சவூதி விருதளித்து கௌரவித்துள்ளது), ஓவைஸிகளும், ஆசம்கான்களும் இஸ்லாமியதேச போராளிகளைப்போல் ஆக்க முற்படுகின்றனர், இவர்களுக்கு முலாயம், கருணாநிதி போன்ற சுயநல இந்துக்களும் துணைபோகின்றனர். முஸ்லிம் இளைஞர்களும் இதைப்போன்ற பைத்தியங்களின் பேச்சைக்கேட்டு, வரப்போகும் ஆபத்தை அறியாமல் இஸ்லாமிய தேசபயங்கரவாதிகளின் காட்டுமிராண்டித்தனங்களைக் கொண்டாட முற்படுகின்றனர். அவர்களின் இந்த மன நிலைக்கு இந்துக்களின் அச்சுறுத்தல் காரணமாகக் காட்டப்படுகிறது. உண்மையில் இஸ்லாமிய இளைஞர்களிடம் பரவிவரும் அடிப்படைவாத ஆதிக்கவெறியின் வேகத்தைக்கண்டும், கூட்டத்தைச் சேர்த்துக்கொண்டு அவர்கள்விடுக்கும் கோரிக்கைகள், மற்றும் மிரட்டல்களைக் கண்டும் இந்த நாட்டில் பெரும்பான்மையாக உள்ள இந்துக்கள், சிறுபான்மை என்று சொல்லப்படும் முஸ்லிம்களைக்கண்டு அச்சத்துடனேயே வாழ்கிறார்கள். உதாரணத்திற்கு ஒவைசியைப்போல ஒரு இந்துவால் ஏதேனும் ஒரு முஸ்லிம் நாட்டில் பேசமுடியுமா? அதுமட்டுமல்ல முஸ்லிம்கள் ஒருபகுதியில் குடியேறி சிறு கூட்டமாக ஆனவுடன் அப்பகுதியில் தங்களின் ஆதிக்கத்தை செலுத்த, தகிடு தத்த வேலைகளில் இறங்கவும் தயங்குவதில்லை, தேச பிரிவினையின்போது கேட்டதைப்போல் தனித்தொகுதியும் கேட்கின்றனர்.
இங்கு இஸ்லாமியதேசம் அமைப்பிற்க்கு ஆதரவில்லை எனும் கருத்தின் பொருள், அடிப்படைவாத பயங்கரவாதத்தை இந்திய முஸ்லிம் இளைஞர்கள் அனைவரும் முற்றாக நிராகரித்துவிட்டார்கள் என்பதல்ல, அவர்களுக்கு பொதுமக்களை ,சமுதாயத்தை மிரட்டி பணியவைக்க அதைவிட பொருத்தமான வேறு அமைப்புகளும், வழிகளும் உள்ளன என்பதுதான்.
மேற்கண்ட சூழ்நிலைகளின் பின்ணணியில் முஸ்லிம்களின்மக்கள்தொகைப் பெருக்கவிகிதத்தையும்கவனத்தில்கொண்டால் ராவத்தும்,சாக்ஷிமஹராஜும் சொல்வதன் அர்த்தம் புரியும். ஆனால் பிரச்சினை என்னவென்றால் இந்துக்கள் உரக்கபேசுபர்களாக உள்ளனரே தவிர, இலக்குகளை  அடைய திட்டமிட்டு புத்திசாலித்தனத்துடன் செயல்படும் திறமை இல்லாதவர்களாக உள்ளனர்.
மாறாக முஸ்லிம் தலைவர்கள் பொதுவுடைமை, சமூகநீதி என்று பேசியபடி தங்களது இலக்கைநோக்கி தெளிவாக முன்னேறியபடி உள்ளனர். தலித்துகள் இவர்களது குயுக்தியில் சிக்கி ஏமாந்துவிடக்கூடாது. தலித்துகளுக்கு ஆதரவாக இந்த முஸ்லிம் வெறியர்கள் பேசுவதெல்லாம் இவர்களது பிரித்தாளும் தந்திரத்தின் ஒருபகுதிதான். ஒற்றுமையான எருதுகளும் சிங்கமும் கதை நம் அனைவருக்கும் ஞாபகம் இருக்கும் என நம்புகிறேன். முஸ்லிம்கள் கனிசமாக உள்ளபகுதிகளில், அவர்கள் தலித்துகளுக்கு கிடைக்கவேண்டிய நியாயமான உரிமைகளையும்கூட பயமுறுத்தல் போராட்டங்கள்மூலம் பறிக்கமுயல்கின்றனர். தலித் தலைவர்கள் என்று கூறிக்கொள்பவர்கள் கவனிக்கவேண்டிய விஷயம் இது.
பொதுக்கூட்டங்களில் இவ்விஷயங்கள் பேசப்படும்போது திட்டமிட்டு ஏற்படுத்தப்படும் சர்ச்சைகளால் கருத்தின் சாரம் சிதைக்கப்பட்டு நோக்கம் தவறிவிடுகிறது. எனவே பொதுக்கூட்டங்களில் பேசுவதைவிடவும் இவற்றை உடனடியாக மக்களிடம் நேரடியாகக் கொண்டு சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களை ஒன்று சேர்ப்பதுதான் மிகவும் முக்கியமானது. இந்த விழிப்புணர்வின்மூலம் அனைத்துதரப்பினரையும் சமமாக நடத்தும் வலிமையான நிலையான ஹிந்து அரசு நிலைபெற வழியேற்படுத்த வேண்டும். அது நடந்தால் இந்துக்கள் நலமுடன் இருக்கவும், இந்தியமுஸ்லிம்கள் தங்களது மத்தியகிழக்கு சகோதரர்களைப்போல் அல்லல்படாமல், இந்தியாவில் அமைதியாக வாழவும் வழி ஏற்படும்.
விபரங்களுக்கு