24/01/2015

என்தாயின்பெருமை-எனதுகாணிக்கை


எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே – அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே – அவர்
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து
சிறந்ததும் இந்நாடே – இதை
வந்தனை கூறி மனதில் இருத்தி என்
வாயுற வாழ்த்தேனோ – இதை
வந்தே மாதரம் வந்தே மாதரம்
என்று வணங்கேனோ?
இன்னுயிர் தந்தெமை ஈன்று வளர்த்தருள்
ஈந்ததும் இந்நாடே – எங்கள்
அன்னையர் தோன்றி மழலைகள் கூறி
அறிந்ததும் இந்நாடே – அவர்
கன்னியராகி நிலவினிலாடிக்
களித்ததும் இந்நாடே – தங்கள்
பொன்னுடல் இன்புற நீர் விளையாடி இல்
போந்ததும் இந்நாடே – இதை
வந்தே மாதரம் வந்தே மாதரம்
என்று வணங்கேனோ?
மங்கையராயவர் இல்லறம் நன்கு
வளர்த்ததும் இந்நாடே – அவர்
தங்க மதலைகள் ஈன்றமுதூட்டித்
தழுவியதிந்நாடே – மக்கள்
துங்கம் உயர்ந்து வளர்கெனக் கோயில்கள்
சூழ்ந்ததும் இந்நாடே – பின்னர்
அங்கவர் மாய அவருடல் பூந்துகள்
ஆர்ந்ததும் இந்நாடே – இதை
வந்தே மாதரம் வந்தே மாதரம்
என்று வணங்கேனோ?

பெருமாள்முருகன் ஒரு இலக்கிய வியாதி.
மாதொருபாகன் புத்தகம்பற்றி பரவலான விமர்சனங்கள். வாதம், எதிர்வாதம், கருத்துசுதந்திரம் என்று பலத்த கூச்சல், இவற்றோடு கருத்து சுதந்திரத்துக்காக தினகரன் மதுரை அலுவலகத்தை தீவைத்து அப்பாவி உயிர்களைப் பலிவாங்கிய ( செய்தவர்களை காவல்துறை கண்டுபிடித்துவிட்டதா எனத் தெரியவில்லை!!) நற்செயலுக்கு  காரணமான தளபதி ஸ்டாலின் அவர்கள்வேறு  எழுத்தாளருக்கு ஆதரவாக சந்தில் சிந்து பாடுகிறார்.

நான் இந்த புத்தகத்தைப்படிக்க(கிடைக்க)வில்லை ஆனால் மேலே உள்ள பக்கங்களின் படம் இணைய தளத்தில் உள்ளது. இது உண்மையான படம் என்றால் வண்டுமுருகனுக்கு  sorry  பெருமாள் முருகனுக்கு நடந்தவை எல்லாம் சரி என்றே தோன்றுகிறது, நாமும் போராட்டத்தில் பங்கெடுத்திருக்கலாம், காலம் கடந்துவிட்டது. பரவாயில்லை மற்ற பலரது கருத்துக்களையாவது  நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளலாம் என்று இப்பதிவிடுகிறேன்.  தீர்ப்புகளை நீங்களே எழுதுங்கள்.

இது ஹிண்டுவில் வந்த பெருமாள்முருகனின் பேட்டி

Did you not realise that the theme of the novel and making references to a community could land you in trouble?

Our society is steeped in casteism; how can a writer and his writings remain aloof? I have used the word Gounder. But there are so many communities that bear the title. I have avoided referring to any community in “Pookuli.”

Is there any documentary evidence to support the existence of consensual sex, written about in the book?

There is no historical evidence. Details about the custom were passed on orally. Writer Theodore Baskaran and Professor A.K. Perumal have also written about similar customs that prevailed in other parts of the State. For example, [there is] the Thuppatti festival in which men and women participate while covering their faces.

kolappan.b@thehindu.co.in 12/1/2015

இதன்மூலம் ஆதாரமில்லாதவற்றைக்  கற்பனையாக எழுதியுள்ளதை ஒப்புக்கொள்கிறார்.

மேலும் இதுபற்றி எழுத்தாளர் திரு யுவகிருஷ்ணா தனது தளத்தில் இட்ட பதிவை இங்கு பகிற விளைகிறேன்

ஓவர் முற்போக்கு ஒடம்புக்கு நல்லதில்லை - திரு யுவகிருஷ்ணா.

இன்னமும் ‘மாதொருபாகன்’ வாசிக்கவில்லை.

எனவேதான் அந்த நூல் மதவெறியர்களால் எரிக்கப்பட்டது என்று கேள்விப்பட்டபோது கோபம் வந்தது. ஒருவேளை முன்பே வாசித்திருந்தால் கோபப்பட்டிருக்க வாய்ப்பேயில்லை. ‘மாதொருபாகன்’ நாவலுக்கும், எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்களுக்கும் ஆதரவான இயக்கங்களில் பங்குகொள்ள தயாராக இருப்பதாக சில நண்பர்களிடம் ஒப்புக்கொண்டிருந்தேன். என்னுடைய ஆதரவை முற்றிலுமாக ‘வாபஸ்’ வாங்கிக் கொள்கிறேன்.

நண்பர் ஒருவர் அந்நாவலின் 'objectionable content' என்னவென்பதை முகநூலில் இட்டிருந்தார். சற்றுமுன்புதான் அதை பார்த்தேன். அந்த இரு பக்கங்களையும் வாசித்தபோது திருச்செங்கோடுவாழ் நண்பர்களுக்கு எவ்வளவு கோபமும், வன்மமும் ஏற்படும் என்பதை புரிந்துக்கொள்ள முடிகிறது. மடிப்பாக்கத்தில் இப்படியொரு ‘தேர்த்திருவிழா’ நடந்தது என்று ஏதேனும் ஒரு படைப்பாளி, தன் கருத்துச் சுதந்திரத்தின் வாயிலாக புனைந்திருந்தாலும் எனக்கும் இப்படிதான் இருந்திருக்கும்.

ஆதாரமில்லாமல் வாய்வழியாக சொல்லப்படுகிற ஒரு கதையை, இலக்கியத்தின் ஏதோ ஒரு வடிவில் பதிவு செய்யப்படும்போது அது வரலாறாக நம்பப்பட்டு விடுகிற ஆபத்து இருக்கிறது. புராண இதிகாசப் பாத்திரங்களையே கூட மக்கள் அப்படிதான் நம்பி தொலைத்துக்கொண்டு நம் கழுத்தை அறுக்கிறார்கள் இல்லையா? இன்னமும் ராமர்பாலம் இருக்கிறது, அதை ராமரின் ப்ளான்படி குரங்குகள் போட்டது என்று எந்த லாஜிக்கும் இல்லாமல் மத்திய அரசேகூட நம்புகிறதுதானே?

ஏதோ காரணங்களால் குழந்தைப்பேறு தள்ளிப்போகும் அல்லது நிரந்தரமாக குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத பெண்களை ‘மலடி’ என்று இழிவுப்படுத்துவதைவிட மோசமான இழிவுப்படுத்துதலை ‘மாதொருபாகன்’ செய்திருக்கிறது. பெண்ணியவாதிகள், எப்படி இந்த நாவலை ஆதரித்து பேசுகிறார்கள் என்றெல்லாம் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. அவர்களும் இன்னமும் என்னைப்போலவே நாவலை வாசித்திருக்க வாய்ப்பு இருந்திருக்காது.

இப்படியொரு ‘கூட்டுக்கலவி’ சித்தரிப்பு, அந்த நாவலுக்கு அவசியமாக வேண்டுமென்கிற கட்டாயம் இருக்கும் பட்சத்தில் ஏதோ ஒரு கற்பனையூரில் நடைபெறுவதாக எழுதியிருக்கலாம். அப்படியும்கூட குழந்தை இல்லாத பெண்களுக்கு இப்படியொரு வாய்ப்பினை கொடுத்தார்கள் என்பதற்கு ஏதேனும் ஆதாரம் தேவை. ஆதாரமற்ற அவதூறுகளை முற்போக்கின் பெயரால் ஆதரிக்க முடியாது. ‘தேவடியா பையா’ என்று திட்டினால் முற்போக்காளனாக இருந்தாலும், அவனுக்கும் கோபம் வருவதுதானே யதார்த்தம்?

“எல்லா விஷயங்களுக்கும் எழுத்துப்பூர்வமான ஆதாரத்தை வழங்க முடியாது” என்கிறார் பெருமாள் முருகன். இது தட்டிக் கழிக்கும் பொறுப்பற்ற பதில்.

வரலாற்று ஆய்வறிஞரான அ.கா.பெருமாள், தியோடர் பாஸ்கரன் போன்றவர்கள் சில தகவல்களை சொன்னார்கள் என்றும் அவர் சொல்கிறார். ஆதாரப்பூர்வமாக அவர்கள் ஏதேனும் சொன்னார்களா, அல்லது வாய்வழி வார்த்தையாக பரப்பப்பட்ட தகவல்களா என்று தெரியவில்லை.

மேலும் இந்த தேர்த்திருவிழா சித்தரிப்புகளுக்கு வாய்வழியாக சொன்னவர்கள்தான் ஆதாரம், அவர்களை அறிமுகப்படுத்தினால் பாதுகாப்பு இருக்காது என்றும் சொல்கிறார். வாய்வழி வார்த்தைகள் எப்படி வரலாறு ஆகும்?

அதுவுமின்றி 2011ல் வெளியான நாவலுக்கு ஏன் 2014ல் போராட்டம் என்பது புரியவில்லை. மூன்று ஆண்டுகளாக இதை திருச்செங்கோடுகாரர்களோ, ஜாதிய அமைப்புகளிலோ அல்லது இந்து அமைப்புகளிலோ ஒருவர்கூடவா வாசித்ததில்லை. எங்கோ லாஜிக் ‘லைட்டாக’ உதைப்பது போலதான் இருக்கிறது. ‘மாதொருபாகன்’ நாவலின் இருகோண முடிவு தனித்தனியாக இரண்டு நாவலாக ‘ஆலவாயன்’, ‘அர்த்தநாரி’ என்று இப்போது காலச்சுவடு வெளியிடப் போகிறதே, அதற்கான டிரைலரா இது?

எழுதியவர்யுவகிருஷ்ணா at Monday, December 29, 2014

இத்துடன் எனது உள்ளத்தில் இருந்த எண்ணத்தைப்போல் அப்படியே முகநூலில் கருத்திட்ட திரு.நம்பிநாராயணன் அவர்களின் கருத்துக்களையும் பதிவிட விரும்புகிறேன்,
(https://www.facebook.com/rsstamilnad/photos/a.1388082944747990.1073741828.1388068124749472/1585187935037489/?type=1)

Nambi Narayanan 

இலக்கிய”வியாதி” பெருமாள் முருகன். இவரின் அற்புதமான நாவலுக்கு இவர் “கண் அடி” படாமல் “ கல் அடி “ பட வேண்டும் என்பதே என் விருப்பம்.

மனத்தின் அரிப்புகளை எழுதி திருப்திபெற ரயில் பெட்டி டாய்லட்களும் பொதுக் கழிப்பறைகளும் இருக்கும் போது இந்தப் பெருமாள் முருகனுக்கு மட்டும் புத்தகம் தேவைப் பட்டிருக்கிறது.

இந்த வக்கிரம் பிடித்த மனிதர் தான் கூறியது உண்மை எனில் தான் சொல்லுவது போலப் புணர்ந்த ஒரு ஜோடியையாவது அல்லது ஒரு ஆணையோ பெண்ணையோவையாவது சாட்சிக்குக் கொண்டு வரவேண்டும். யாரிடம் இருந்து இவர் வாய் மொழியாக அறிந்தாரே அவர்களிடம் கேட்டு சாட்சியை ஒப்படைக்க வேண்டும். இல்லையேல் இவர் இந்த சமுதாயத்தின் மீது உள்நோக்கத்தோடு திட்டமிட்டு பொய்யுரை பரப்பியவர்தான்.

அது சரி அது என்ன தேரடித் தெருவை தேவடியாத் தெரு என்று எழுதுவது ? தேவடியா என்று உச்சரிக்காமல் இவரால் அமைதியாகத் தூங்கமுடியாது போலும் !

சட்டம் பாரபட்சமின்றி செயல்படுமானால் இந்த நபர் இருக்க வேண்டிய இடம் சிறைச்சாலை மட்டுமல்ல, காவல் கண்காணிப்பில், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையாகத் தான் இருக்கும். யாரோ வாய்மொழியாகச் சொல்வார்களாம். அதை நம்பி இவர் கதை எழுதுவாரம். இவரா இலக்கியவாதி...இவர் இலக்கிய வியாதி.

இதுபோல, இஸ்லாமிய மதம் பற்றி ஒரு பொய்யுரையை இவர் கூறியிருப்பாரானால் கல்லால் அடித்தே கொன்றிருப்பார்கள் இந்தக் காட்டுமிராண்டியை. நம்மை இவர் அடிக்கிறார் என்றால் “ ரொம்ப நல்லவன். எவ்வளவு அடிவாங்கினாலும் தாங்கிக்கறான் “ என்ற வடிவேலுவின் நிலையில் நாம் இருப்பதுதான்

நிறைவாக
புத்தக ஆசிரியர் மன்னிப்புகேட்டு புத்தகத்தைவாபஸ் பெறுவதாக அறிவித்து சில பல செண்டிமென்ட் டச் எல்லாம் கொடுத்துவிட்டு போயிருக்கிறார். இந்த முற்போக்கு பைத்தியங்கள் மண்ணைக்கவ்வியதற்கு அனைத்துசாதியினறையும் அரவணைத்துச்செல்லும் பக்குவம்கொண்ட தன்னலமற்ற சில இளைஞர்களின் விடாமுயற்சி என்று RSS முகநூலில் படித்தேன்,சந்தோஷமாக இருக்கிறது..

த ஹிண்டுவில் வந்த A. R. VENKATACHALAPATHY அவர்களின் In defence of the chronicler of Kongu - A. R. VENKATACHALAPATHY 12/1/2015  கட்டுரையின் 
The Hindu wrote:Over 125 years ago, Chinnathayammal and Venkata Naicker of Erode circumambulated the “varadi kal” at Tiruchengode resulting in the birth of the great rationalist, Periyar.
எனும் வரிகளையும் உங்களுடன் அன்போடு பகிர்ந்துகொள்கிறேன் நன்றி.

பின்குறிப்பு: புராண. எனத்தொடங்கும் குறுக்கு கோடிடப்பட்ட வரிகளின் கருத்திலிருந்து நான் மாறுபடுகின்றேன், எனினும் அக் கட்டுரையின் அமைப்பை சிதைக்க விரும்பாததால் அதை அப்படியே இங்கு தருகிறேன்.

மேலும் புராணம் என்பது பூடகமான தத்துவங்களைவெளிப்படுத்துபவை, மாறாக இதிகாசம் என்பது நிகழ்ந்தவரலாறு என்பதும் எனது கருத்து.