10/07/2012

ஹிந்துகுஷ் - பெயர்தரும் பாடம்


இந்தபடத்தில் நாம் காணும் அழகிய நடனம் ஐரோப்பாவின் செக் குடியரசின் தலைநகரான ஃப்ராக் கில் ஜிப்சிகள் எனப்படும் நாடோடிக்கூட்டத்தினரால் நிகழ்த்தப்பட்டதாகும். இம்மக்கள் ஐரோப்பா முழுவதும் பரவி உள்ளனர். இவர்களை இவர்கள் தங்கி இருக்கும் நாடுகள் பெரும் தொல்லையாகக் கருதுகின்றன.இவர்கள் அங்கெல்லாம் சம உரிமையுடன் நடத்தப்படுவதில்லை. கடந்த நூற்றாண்டில் ஐரோப்பாவில் நடந்த இன ஒழிப்புக் கொடுமைகளால் மிகவும் பாதிக்கப்பட்ட இனம் இந்த ஜிப்சிகளாவர். இவர்கள் அங்கு ரோமானிகள் என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் தாங்கள் வாழும் நாட்டைப்பொருத்து வேறுபட்ட மொழிகளைப் பேசுகின்றனர்.


இரண்டாம் உலகப்போர் நடந்த காலகட்டத்தில் ஜெர்மனியைத்தூய்மைப்படுத்தும் நோக்கில் ஹிட்லரால் ஏராளமாகப் படுகொலைசெயப்பட்ட ஏதுமறியா அப்பாவி மக்கள் கூட்டம் இந்த ரோமானிகள் கூட்டமாகும். இன்றும் ஐரோப்பாவில் இவர்கள் வெறுப்புணர்வுடனேயே பார்க்கப்படுகிறார்கள்.

இங்கு ஆசியாவில், ஹிந்துகுஷ் மலைத்தொடர் என்பது 1000 மைல் நீளமும் 200 மைல் அகலமும் கொண்ட மலைத்தொடராகும், இம்மலைத்தொடர் மத்திய ஆசியாவின் அமுதார்ய நதிப்பள்ளத்தாக்கையும், சிந்து நதி பள்ளத்தாக்கையும் பிரிக்கும் விதமாக அமைந்துள்ளது. இம்மலைத்தொடர் இமயமலைத்தொடரின் உப தொடராகும். இம்மலைத்தொடரானது 23000 அடிக்கும் கூடுதலான உயரம்கொண்ட 12 க்கும் மேற்பட்ட பனிமூடிய சிகரங்களைக்கொண்டதாக உள்ளது. இதன் பெரும்பகுதி ஆப்கானிந்தானிலும் பாகிஸ்தானிலும் அமைந்துள்ளது. இம்மலையின் சரிவுகள் தாவரங்கள் வளர்வதற்கு ஏற்ற சூழலைக் கொண்டிறாததால் அவை பசுமை ஏதுமின்றி வறண்டு காணப்படுகின்றன.


கைபர் கணவாய் இம்மலையில்தான் அமைந்துள்ளது. இந்திய சமவெளிக்குள் நுழைவதற்கான நுழைவாயில்போல் அமைந்துள்ளது. மற்ற எந்த வழியைவிடவும் பஞ்சாப்பிற்குள் நுழைய இது மிகவும் எளிய வழியாகும். போர் முக்கியத்துவம் வாய்ந்த இப்பாதை வழியாகத்தான் அலெக்சாண்டர் முதல் (327 BC), தைமூர் (1398 AD), முஹம்மது கஜினி (1001 AD), நாதிர்ஷா (1739 AD) என அனைத்துப்படையெடுப்பாளர்களும் நமது நாட்டைத்தாக்கினார்கள். இம்மலைக்கு நமது முன்னோர்கள் வைத்த பழையபெயர் "பாரியாத்ர பர்வதம்" என்பதாகும்


ஹிந்துகுஷ் பகுதி பழங்காலத்தில் (1000 AD) வரை வாஹிக் பிரதேஷ் மற்றும் காந்தாரதேசத்தில் இருந்தது. காந்தார தேசத்தின் எல்லை இந்த ஹிந்துகுஷ் மலையையும் தாண்டி பரவி இருந்தது. இந்த காந்தாரதேசமானது அயோத்தியை ஆண்ட பரத சக்ரவர்தியின் பேரனான தக்ஷன் என்பவரால் நிர்மாணிக்கப்பட்டது. இந்நாடு தக்ஷசீலத்திலிருந்து இன்றைய உஸ்பெக்கிஸ்த்தானின் தக்ஷகண்ட் (தாஷ்கண்ட்) வரை பரவியிருந்தது. மஹாபாரத இதிஹாசத்தில்வரும் காந்தாரியும், அவர் சகோதரர் சகுனியும் இந்நாட்டு அரசகுடும்பத்தினராவர்.

அதன்பிறகு சந்த்ரகுப்தமௌரியராலும் மௌரியப்பேரரசின் வீழ்ச்சிக்குப் பின் சில கிரேக்கஇன ஆட்சியாளர்களாலும் ஆளப்பட்டது. அவர்களில் சிலர் பௌத்தர்களாகவும் சிலர் வைஷ்ணவர்களாகவும் இருந்தனர். பேக்டிரியாபகுதியில் நடந்த அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்கள் அவற்றை உறுதிசெய்கின்றன.


அதன்பின் ஆண்ட கனிஷ்க்கரது காலத்திலும் பிறகு அப்பகுதியை ஆண்ட ஷாஹியா வம்ச மன்னர்களின் ஆட்சியின்போதும் இப்பகுதி ஹிந்துக்களும் பௌத்தர்களும் வாழும் பகுதியாக சீருடனும் சிறப்புடனும் இருந்தது. இந்நிலையில் ஆப்கானிஸ்த்தான் மீதான முஸ்லிம் படையெடுப்பு 642 AD வாக்கில் தொடங்கியது. பலமுறை முஸ்லிம்களால் அரசுகளும் நகரங்களும் தாக்கி கைப்பற்றப்பட்டபோதும் அவர்கள் மீண்டும் மீண்டும் புரட்சிசெய்து தமது மதத்தையும் நாடு நகரங்களையும் மீட்டபடியே இருந்தனர்.1000AD வரை இப்பகுதி ஹிந்துமதத் தொட்டிலாக இருந்தது. 


இப்பொழுது ஆப்கானிஸ்தானம் ஒரு முஸ்லிம் தேசம். அவ்வாறானால் ஆப்கானிஸ்த்தானின் உண்மையான குடிமக்களுக்கு என்ன ஆகியிருக்கும்? அவர்கள் அனைவரும் என்ன காரணத்தினால் முஸ்லிம்களாக மாறினர்? கீழே நாம் காண்பவற்றில் ஏதேனும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட காரணங்கள்தான் இன்னிலையை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.


  1. ஹிந்துகுஷ் பகுதியின் பூர்வகுடிகள் அனைவரும் இஸ்லாமுக்கு மாற்றப்பட்டிருக்கவேண்டும் அல்லது
  2. அவர்கள் அனைவரும் அழிக்கப்பட்டு அவர்தம்நாடு ஆக்கிரமிப்பாளர்களால் சொந்தமாக்கிக்கொள்ளப்பட்டிருக்க வேண்டும் அல்லது
  3. அவர்கள் தமது சொந்த மன்னிலிருந்து துரத்தப்பட்டிருக்கவேண்டும்.


கி.பி 8 ஆம் நூற்றாண்டுமுதல் 11 ஆம் நூற்றாண்டுவரை ஹிந்துகுஷ் மலைப்பகுதி மற்றும் ஆப்கானிஸ்தான் பகுதிகளில் முஸ்லிம் ஆக்கிரமிப்பாளர்கள் தமது ஆக்கிரமிப்பு முயற்சிக்கும் மதமாற்ற முயற்சிக்கும் அப்பகுதிகளின் பூர்வகுடிகளாகிய ஹிந்துக்களிடமிருந்து விடாப்பிடியான எதிர்ப்பை சந்தித்தனர். இவ்வெதிர்ப்பை பல வரலாற்று பதிவுகள் நமக்குத் தெளிவுபடுத்துகின்றன. 

ஆகவே அவர்கள் மதமாற்றத்துக்கு இறையாகி இருக்க முடியாது.

வேறென்ன நடந்திருக்கும்?

ஹிந்துகுஷ் எனும் பெயரே அவர்களுக்கு என்ன நடந்தது என்பதைக்கூறப் போதுமானதாகும்.

ஆம் நானும்கூட ஹிந்துகுஷ் எனும் பெயரைப் படிக்கும்போது அது இந்துக்களின் நினைவாக உள்ள பெருமைப்படத்தக்க பெயர் என்று எண்ணியதுண்டு, ஆனால் விவரம் தெரிந்தபிறகு.....அடக் கடவுளே!

ஹிந்துகுஷ் என்றால்- ஹிந்து கொலைகளம். அல்லது ஹிந்து கொல்லி. ஆம் இதுதான் பாரசிகமொழியில் ஹிந்துகுஷ் என்பதன் பொருள்.

அம்மலைப்பகுதியிலும், ஆப்கானிஸ்தானிலும் வாழ்ந்த பூர்வகுடிகளான இந்துக்களுக்கு என்ன நிகழ்ந்தது என்பது இப்பொழுது உங்களுக்குப் புரிந்திருக்கும்.

ஹொன்டமிர் எனும் முஸ்லிம் வரலாற்றாசிரியர் ஆப்கானிஸ்த்தானில் 15,00,000 இந்துக்கள் கொடுமைப்படுத்தப்பட்டதை பதிவுசெய்துள்ளார். 

அதுமட்டுமல்ல பலமுறை இந்தியாமீது படையெடுத்துவந்த இக்கொலைகாரர்கள் கொல்லப்பட்டதுபோக மீதமிருந்தவர்களை அடிமைகளாக்கி இம்மலைவழியே கொண்டு சென்றனர். அந்தமாதிரியான சமயங்களில் இம்மலையின் கொடுங்குளிர் தாங்காமல் லட்சக்கணக்கான அப்பாவி ஹிந்துக்கள் உயிரை விட்டனர். எஞ்சியவர்கள் அடிமைகளாக வாழவேண்டியதாயிற்று. 

இவ்வாறு முஸ்லிம்களால் அடிமைகளாக்கப்பட்ட மக்கள் என்ன ஆனார்கள்? அவர்கள் எல்லாம் எங்கே?

இதற்கானபதில் 1993ம் வருடத்திய நியூயார்க் டைம் பத்திரிகையில் கொடுக்கப்பட்டுள்ளது (மே-ஜூன்). 

ஐரோப்பாவிலும் மத்திய ஆசியாவிலும் உள்ள அனைத்துநாடுகளிலும் யாருமற்ற அனாதைகளாக நாடோடிகளாக சுற்றிக்கொண்டிருக்கும், ஹிட்லரால் விஷவாயுசெலுத்திக் கொல்லப்பட்ட 3,00,000 பேர்களை இழந்த மக்கல் கூட்டமான ஜிப்சிகள்தான் அவர்கள். ஐரொப்பாவில் சுற்றிக்கொண்டிருக்கும் அவர்களது மொழி ஐரோப்பிய மொழி குடும்பம் அல்ல. அது பஞ்சாபி மொழியை ஒத்த சமஸ்கிருத வார்த்தைகளையும் கொண்டிருக்கும் இந்திய மொழிக்குடும்பத்தைச்சார்ந்தது. ஜிப்சிகள் நாடோடிகளாக அலையத்தொடங்கியகாலம் முஸ்லிம்கள் நாடுபிடிக்கக் கிளம்பிய காலகட்டத்துடன் சரியாக ஒத்துப்போகிறது.

இதுதான் ஹிந்துகுஷ் மலைக்கும் ஜிப்சிகளுக்கும் நமக்கும் உள்ள தொடர்பு. 

சொந்தமன்னிலிருந்து விரட்டப்பட்டஹிந்துக்களும் அடிமையாக்கப்பட்டு தப்பிப்பிழைத்த ஹிந்துக்களும் எங்கெங்கோ நாடோடிகளாக அலைந்து கண்டவரிடமெல்லாம் உதைபடுகின்றனர்.

நடந்த படுகொலைகளையும், முஸ்லிம் வெறியர்கள் நடத்திக்கொண்டிருக்கும் படுகொலைகளையும், வருங்காலத்தில் ஹிந்துக்களாகிய நமக்கு வரக்கூடிய ஆபத்தையும் தொடர்ந்து உணர்த்தும்விதமாக ஹிந்துகுஷ் தொடர்ந்து அவ்வாறே  இருக்கிறது.



இங்குநாம் வரலாற்றை மறந்துவிட்டோம், அதுகற்றுத்தந்த பாடத்தை மறந்துவிட்டோம். அன்றுபோலவே இன்றும் பிரிந்துகிடக்கின்றோம். ஆனால் முஸ்லிம் வெறியர்கள் அதேவெறியுடனும் பேராசையுடனும் குரூரத்துடனும் இன்னும் நம்மைத் தாக்கிக்கொண்டுள்ளனர். அவர்களுக்கு நாம் என்னசாதி?, நமது மொழி என்ன? நாம் ஆரியானா? திராவிடனா? எதுவும் தேவை இல்லை.

அவர்களுக்குத்தேவை அடிமைகளாக நாம். ஆக்கிரமிக்க நமது மண்.

இங்கு எனக்கு நினைவுக்குவரும் பாடல்வரிகள் 

"விழித்துக்கொண்டோரெல்லாம் பிழைத்துக்கொண்டார்"

சகோதரர்களே நிலைமை மீண்டுமொருமுறை கைமீறும்முன் விழித்துக்கொள்ளுவோம். நமது வாரிசுகளாவது ஜிப்சிகளாகாமல் வாழட்டும்.

தமிழரின் வாழ்வில் வேதம் திருமுறைகளின் பங்கு


குமரகுருபரர் இதழ் - தலையங்கம்



சைவ சமயம் புராதனமான சமயம். சைவத் திருக்கோயில்கள் பாரம்பரியப் பெருமை உடையவை. நம் திருக்கோயில்களில் உள்ள இறை திருமேனிகள் வேத மந்திரங்களால் உருவேற்றப்பட்டவை. கும்ப தீர்த்தத்தில் சான்னித்தியங்களை, பிம்பத்தில் அபிஷேகித்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கச் செய்யும் அதி சூட்சம முறையையே கும்பாபிஷேகம் என்கிறோம். வேத வேள்விகள் இறைவனையும் தேவதைகளையும் அவிர்ப் பாகத்தால் திருப்திப்படுத்தும் நுணுக்கமான தேவகன்மங்கள் ஆகும். இச்செயல்களால் திருக்கோயில் இறை திருமேனிகளில் சான்னித்தியம் பிரகாசிக்கிறது. அப்படிப்பட்ட திருமேனிகளின் முன் சென்று பயபக்தியுடன் வேண்டும் அடியார்களின் வேண்டுதல்கள் யாவும், வேண்டியாங்கு நிறைவேற்றப்படுகின்றன.

இறை திருமேனிகளின் சான்னித்தியத்தை மந்திரங்களாலும், நித்திய நைமித்திக வழிபாடுகளாலும் காப்பதும், மேம்படுத்துவதும் சமயச் சான்றோர்களின் கடமையாகும். இது, வரங்கள் வேண்டி ஏங்கிக் கிடக்கும் பல்லாயிரம் கோடி பக்தர்களின் நலன் சம்பந்தப்பட்டது. இது விஷயத்தில் கவனக்குறைவோ, மரபு மீறலே ஏற்படுத்திப் பக்தர்களுக்குப் பலன் கிடைக்காதபடிக்கு ஆக்கி, அவர்களின் தெய்வ நம்பிக்கையைப் பாழ்படுத்திவிடக் கூடாது.

வேதம் பொதுவானது. தனியொரு பிரிவினருக்கு என்றில்லாமல், தெய்வத்திற்கே உரிய மொழியில் வேதங்கள் உள்ளன. “வேதங்கள் இறைவனே அருளியவை” என்பதே நம் சைவத்தின் அசைக்க முடியாத நம்பிக்கை. இறைவன் அருளிய வேதங்களில் இறைவனே போற்றப்படுகிறான். “தன்னை ஒப்பார் பிறர் இல்லாமையால் தாமியற்றிய வேதங்களில் இறைவன் தன்னைத் தானே புகழ்ந்து கொண்டா” என்று, 300 ஆண்டுகளுக்கு முன்னரே கங்கைவரை சென்று, காசியில் சைவமும் தமிழும் பரப்பிய அருட்கவிஞர் ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் அதற்குக் காரணம் சொல்கிறார்.

தமிழர்கள், ஆதியிலிருந்தே வேதங்களைப் போற்றி வந்துள்ளனர். மறை (வேத) வழக்கம் இல்லாதாரை “மாபாவிகள்” என்றே நம் சைவம் கடிந்து பேசுகிறது.

“வேதத்தில் உள்ளது நீறு”, “வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது நாதன் நாமம் நமசிவாயவே” என வேதத்தை ஏற்றுப் போற்றும் சைவத்தின் முதல் ஆச்சார்யர் திருஞானசம்பந்தப் பெருமான், “வேத வேள்வியை நிந்தனை செய்துழல் ஆதமில்லி அமனொடு தேரரை”, “ஆகமத்தொடு மந்திரங்க ளமைந்த சங்கதபங்கமா........ ஆகதர்” என்றெல்லாம் வேதாகமங்களை வெறுத்த சமண சாக்கியர்களைப் பதிகந்தோறும் பத்தாவது பாடலில் சாடிப் பாடியுள்ளமையும், “மாசுமெய்யர் மண்டைத்தேரர், குண்டர், குணமிலிகள், பேசும் பேச்சை மெய்யென்றெண்ணி யந்நெறி செல்லன்மின்” என்று நமக்கு அறிவுறுத்தி யுள்ளதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

சமயங்கள் யாதாயினும் அதன் மரபுகளைக் கடைப்பிடிப்பதே அச்சமயிகளின் கடமை. அதில் மாறுபடுபவர்கள் அச்சமயத்திலிருந்து நீங்கியவராவர்.

“அனுச யப்பட் டதுஇது வென்னாதே 
கனிம னத்தொடு கண்களும் நீர்மல்கிப் 
புனித னைப்பூவனு னூரனைப் போற்றுவார் 
மனித ரில்தலை யான மனிதரே.”
- திருநாவுக்கரசர். 

கி.மு. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த நூலாகிய தொல்காப்பியத்தைக் கேட்டு அங்கீகரித்தவர் என்று அதன் பாயிரத்தில் “அதங்கோட்டாசான்” என்பவரை, பாயிரம் பாடிய தொல்காப்பியரின் ஒரு சாலை மாணாக்கராகிய பனம்பாரர் குறிப்பிடுகிறார். அதில் அவர் அதங்கோட்டாசானை “நான்மறை முற்றிய அதங்கோட்டாசான்” எனக் குறிப்பிடுகிறார். சதுர்வேத பண்டிதராகக் கி.மு. ஏழாம் நூற்றாண்டிலேயே சேரநாட்டுத் தமிழர் ஒருவர் விளங்கியிருந்தார் என்பதை நாம் மறக்கக்கூடாது. தொல்காப்பியமும் வேதத்தை “அந்தணர் மறை” என்றே குறிப்பிடுகிறது.

இடைச்சங்க காலத்துப் பாண்டிய மன்னனாகிய முதுகுடுமிப் பெருவழுதி, வேத வேள்விகள் பல செய்வித்தமையால் “பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி” என்ற சிறப்புப் பெயர் பெற்றான்.

தமிழின் மிகப் பழம்பெரும் அறநூலாகிய திருக்குறளும் “அந்தணர் நூ”, “ஓத்து” என்று வேதத்தைச் சொல்கிறது; “அவிஉணவு” என்று அவிர்ப்பாகத்தை - வேள்வி உணவைச் சொல்கிறது. திருக்குறள் “அறுதொழிலோர்” என்று குறிப்பிடுவதில் உள்ள ஆறு தொழில்களில், “வேதம் ஓதுதல், வேதம் ஓதுவித்தல், வேத வேள்வி செய்தல், வேத வேள்வி செய்வித்தல்” என்பன அடங்கும். திருக்குறளைத் “தமிழ் மறை” என்கிறோம். “மறை என்ற சொல் வடமொழி வேதத்தையே குறிக்கும். ஆகையினால் “தமிழ்” என்கிற முன் ஒட்டுச் சேர்த்துச் சொல்கிறோம்.

சங்க இலக்கியங்களாகிய பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களில் அக்காலத்தில் வேத வேள்விகள் பரவலாக நடந்தமைக்கான சான்றுகள் பல உள்ளன.

காப்பிய இலக்கியமாகிய சிலப்பதிகாரத்தில், கண்ணகியின் திருமணம் வேத முறைப்படி, “மாமுது பார்ப்பான் மறைவழி காட்ட நடந்தது” என்று வருகிறது. கண்ணகி கோட்டத்திற்குச் சேரன் செங்குட்டுவன் வேத விதிப்படி குடமுழுக்குச் செய்வித்தான்; அத்திருவிழாவில் வேள்விச் சாலைக்கு மாடல மறயோனும் செங்குட்டுவனும் சென்ற காட்சி இளங்கோவடிகளால் விவரித்துச் சொல்லப்படுகிறது.

இவையெல்லாம் ஆயிரத்து எழுநூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆயிரம் ஆண்டுகளில், தமிழ் நிலத்தில் - தமிழரின் வாழ்வில் வேதங்கள் - வேள்விகள் கொண்டிருந்த தொடர்புகள் பற்றிய ஆவணக் குறிப்புகள். தமிழில் வேதங்கள் என்றோ, தமிழில் வேள்விகள் என்றோ கூறுவதற்குச் சான்றே இல்லை.

தேவாரங்கள் வேதசாரங்கள். அவை கைகாட்டுவது வேதங்களி - ஆகமங்களை - வேத வேள்விகளை. திருமுறைகளில் வேத வேள்விகள் பற்றிய நூற்றுக்கணக்கான புகழுரைகள் உள்ளன. வேத வேள்விகளை நிந்தனை செய்வதை பெரும் குற்றமாகவே நம் திருமுறைகள் அறிவிக்கின்றன. அப்படிச் செய்பவர்களைப் புறச்சமயத்தார்களாகவே அவை புறந்தள்ளுகின்றன. திருமுறைகளில் மிகப் பழமையானது எனப்படும் திருமந்திரம், “வேதத்தைவிட்ட அறம் இல்லை” என்றதுடன், வேதம் பற்றித் தர்க்கவாதம் செய்தல் கூடாது எனவும் எச்சரிக்கிறது. வேதம், ஆகமம் பற்றித் தனித் தலைப்பிட்டே திருமூலர் கொண்டாடுகிறார். தன்னை நன்றாகப் படைத்தது, சிவனை நன்றாகத் தமிழ் செய்வதற்காக என்று குறிப்பிட்ட அவர், வேதங்களைப் புகழ்ந்ததை மட்டும் கண்டும் காணாமற்போவது எப்படி முறையாகும்?

தமிழருக்கென்று தனியொரு வேள்வி இருந்ததாக எவ்விதச் சான்றும் இல்லை. சமயாசாரியர்கள், சந்தானாசாரியர்கள் போன்ற அருளாளர்கள் வாழ்ந்த காலங்களில் தமிழில் வேள்வி, தமிழில் கும்பாபிஷேகம் என்றெல்லாம் மரபை மாற்றி யாரும் பேசவுமில்லை, செய்யமுற்படவும் இல்லை. எனவே அவை “மரபு மீறல்” எனச் சுட்டிக்காட்ட வேண்டிய தேவை, அவர்களுக்கு எழவில்லை.

நாம் பேசுவது தமிழ். திருஞானசம்பந்தப் பெருமான் பாடிய திருமுறைப் பாடல்கள், “திருநெறிய தமிழ்” என்றும், அது இறைவன் தனது வாக்கென்றும் குறித்துள்ளதை எண்ணிப் பார்க்க வேண்டும். பாடுவார்க்கும் கேட்பார்க்கும்; அவர்க்கும் தமர்க்கும், இம்மைக்கும் மறுமைக்கும் நற்பயன் உண்டென்றும்; எல்லியும் பகலும் இடர் இல்லை என்றும், எல்லாப் பேறுகளும் கிட்டுமென்றும் அருளியுள்ளதை எண்ணிப் பார்க்க வேண்டும். திருமுறையைக் கொண்டு வேள்வி செய்ய யாண்டும் அருளியதில்லை. திருஞானசம்பந்தப் பெருமான் அனல்வாதப் புனல்வாதங்களால் திருநெறியத் தமிழ்த் திருமுறைகள் “வெந்தழலில் வேகாது, வெள்ளத்தால், போகாது” என்று மெய்ப்பித்துக் காட்டிய பின்னும், திருமுறைகளை குண்டத்திலும் குடத்திலும் செலுத்துவது நெறியல்லா நெறி என்று உணர வேண்டும். இறைவன் திருச்செவியில் நேரே சென்று சேர்ந்து பயனும் அளிக்கும் தமிழை - திருமுறைகளை ஊடகங்கள் வழி செலுத்துவதுதான் தமிழுக்கும் திருமுறைக்கும் பெருமையா? என்று எண்ணிப் பார்க்க வேண்டும். இவ்வாறெல்லாம் சொல்வது இடையாயினார்க்கு, மறைகள் நிந்தனை சைவ நிந்தனைபொறா மனத்தினார்க்கு.

ஆங்கிலக் கல்வியை உயர்த்திப் பேசினால் அப்படிச் சொல்டவரை, யாரும் “தமிழ்த் துரோகி” என்று சொல்வது இல்லை. “தமிழும் வடமொழியும் சைவத்தின் இரு கண்கள்; திருமுறைகளும் வேதங்களும் நம் கண்மணிகள்” என்று ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக இருந்துவரும் மரபைச் சொன்னால், சிலர் தமிழ்ப் பற்றில்லாதவர்கள் என்ற ஆதாரவிரோத வார்த்தைகளை அள்ளிவிடுகிறார்கள்.

திருமுறைகள் ஓதுவதற்கு உரியன. அப்படித்தான் திருமுறை ஆசிரியர்களே நமக்கு உத்தரவிட்டிருக்கிறார்கள். திருமுறை ஓதினால் நிச்சயம் பயன் உண்டு. வேதங்களில் வேள்விச் சடங்குகள் உள்ளன. அந்தத் தேவை உள்ள இடங்களில் அதைத்தான் பயன்படுத்த வேண்டும். இவையெல்லாம் தெரிந்துவைத்துக் கொண்டும் தமிழ்ப் பற்று என்னும் போர்வையில் புகுந்து கொண்டு, வசதிக்காக - புகழுக்காக - பொருளுக்காக - கூட்டம் சேர்ப்பதற்காக – மரபுகளை மறைத்துப் பேசலாமா? செயற்படலாமா?

எதற்கு எது உரியதோ, அதற்கு அதைப் பயன்படுத்த வேண்டும். அறிவாற்றல்களால், ஞானத்தால் பழுத்த நம்முன்னோர்கள் எப்படிச் சொன்னார்களே அப்படி நடக்க வேண்டும்; அவர்களுக்கு இல்லாத தமிழ் பற்று நம்மில் யாருக்கு இல்லை.

வேதங்களை உடன்படுபவர்களுக்குத்தான் “வேள்வி” என்ற சொல்லை உச்சரிக்கவே தகுதி வரும்.

மழையை வரவழைக்க வேள்விகள் உள்ளன. அவை வேத வேள்விகள். ஆனால், சுந்தரமூர்த்தி சுவாமிகள், ஏயர்கோன் கலிக்காம நாயனாருடன் திருப்புன்கூர் தலத்தைத் தரிசனம் செய்தபோழ்து, “வையகம் முற்றும் மாமழை மறந்து வயலில் நீரில்லாத காலத்தில் மழை பெய்ய” பன்னிருவேலி நிலம் இறைவர்க்குக் கொடுத்ததும், பெய்த பெருமழையால் உண்டாகிய பெருவெள்ளத்தை நீக்கி, அதன்பொருட்டு ஏயர்கோன் கலிக்காமரிடம் மீண்டும் ஒரு பன்னிரு வேலி நிலத்தை இறைவன் பெற்றருளினான் என்ற வரலாற்றைத் திருப்புன்கூர்த் தேவாரத்தில் பதிவு செய்துள்ளார்.

பெருமழையைத் தருவித்ததும், நிருத்தியதும் பக்தியே ஆகும். எனவே திருப்பதிகங்கள், ஓதிப் பயன்பெற உரியன என உணர வேண்டும். திருமுறைகளை ஓதினாலே பயனுண்டு என்ற சைவத்தின் அரிச்சுவடித் தத்துவத்திலே நம்பிக்கை வேண்டும். “பெயர்த்தும் பன்னிருவேலி கொண்டு” (ஏயர்கோன் கலிக்காமர் வரலாறு) மழையை நிறுத்தினார் - திருமுறையைக் கொண்டு வேள்வி செய்து மழை பெய்யவில்லை.

வேள்வி செய்ய வேண்டும் என்ற உந்துதல் வந்துவிட்டால் வேத வழிப்பட்டதாக ஆகிவிடும். வேதத்தில் நம்பிக்கையில்லை. ஆனால் வேள்வியில் நம்பிக்கை உண்டு! அதையும் திருமுறைகளைக் கொண்டு செய்வது என்பது செய்யத்தக்க செயல் அல்ல என்பதை உணர வேண்டும். இத்தகு செயல்களை, கடந்த 50 ஆண்டுகட்கு முன்னர்வரை யாரும் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும். இத்தகைய “மரபு மீறும் செயல்கட்கு மறைகளோ, திருமுறைகளோ எந்த வழியும் வைக்கவில்லை” என்று தெரிந்தே அவ்வாறு செய்வது, திருமுறைகளில் ஆழங்காற்பட்ட பயிற்சி இல்லாத, தமிழ் ஆர்வம் என்ற மாயைக்கு உட்பட்ட, எளிய மக்களின் பலவீனத்தைப் பயன்படுத்தி, அதன்மூலம் புகழ், பொருள் சேர்க்கும் நோக்கமாகவே கருதப்படும். தமிழ்ப் பற்று - திருமுறைப் பற்று என்று கொள்ளப்பட்டாது.


நன்றி : http://www.shaivam.org

வேதாகம முறைப்படியே திருக்கோயில் பூசனைகள், நடைபெற வேண்டுமா?




திருச்சிற்றம்பலம்

முன்னுரை :

தமிழில் உள்ள இலக்கண இலக்கியங்கள், திருக்குறள், சைவ சமய சாத்திரங்கள், தோத்திரங்கள், புராணங்கள் அனைத்திலும் வேதத்தைப் பற்றிய செதிகள் உள்ளன. வேதத்தை மறுத்த செய்தி ஏதும் இல்லை. சைவ சமயாசாரியர்கள், சந்தானாசாரியர்கள், அதன் வழிவரும் ஆதீனம், திருமடங்களும் வேதாகமங்களை ஏற்றுப் போற்றுகின்றன. சிலர் தமிழிலும், திருமுறைகளிலும் இல்லாததை இருப்பது போல் "தமிழ் நெறி", "திருமுறை நெறி" என்று சொல்லி, "சலத்தாற் பொருள் செய்து ஏமார்த்தல்" செய்து வருகின்றனர். அது கூடாதென்பதை, 5, 6, 7-02-2010-இல் தில்லையில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற பன்னிரண்டாவது உலகச் சைவ மாநாட்டின் நிறைவு நாளில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்ட செய்தியை, காசிமடம் வெளியிட்ட "வேதநெறி தழைத்தோங்க, மிகுசைவத் துறை விளங்க!" என்ற நூலின் முன்னுரையின் முதலிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. வேதத்தை 'உலகத்தார் உண்டு' என்று ஏற்பதையும் காட்டி உள்ளோம். 'எத்திறத்தானும் தேறார்' என்ற நிலையில் இதுதான் அது, அதுதான் இது என்பதுபோல் பேசியும் எழுதியும் வருகின்றனர். தெளிவுபெற விரும்புபவர்களுக்கு பயன்படும் என்று கருதி இது எழுதப்பெறுகிறது.

ஏத்தல் - வழிபாடாகுமா?

ஏத்து - ஏத்து! என்னும் ஏவல் - துதி.
ஏத்தல் - துதித்தல், வணங்குதல்.
ஏத்துதல் - துதித்தல், வணங்குதல்.
(வெள்ளி விழா - தமிழ்ப் பேரகராதி - 1, பக்.264)
இம்மூன்று சொற்கள் பூசை செய்தலைக் குறிக்காது. தோத்தரித்தல், அட்டாங்க, பஞ்சாங்க வணக்கங்கள், கைகூப்பு ஆகியவற்றைக் குறிக்கும்.

இறைவனை எம் மொழியிலும் துதிக்கலாம். பதினெட்டு மொழிகளில் ஏத்தலாம் என்பது சரியே. மேலும், அறிந்த மொழி எதுவாயினும் அவ்வம் மொழியும் துதிப்பதற்கு உரியதே. இல்லுறை தெய்வத்தைத் தீட்சை பெற்றவர்கள், குரு உபதேசித்தபடியும், ஏனையோர் அறிந்த மொழிகளிலும் தோத்தரிக்கலாம். சித்தாந்த சைவர்கள் பன்னிரு திருமுறைப் பாடல்களைப் பாடித் துதிப்பதே சிறப்பு. பாடும் வாய்ப்பு இல்லாதவர்கள் வந்தவணம் ஏத்தலாம்.

கோயில்களின் பூசனை என்பது வேறு. அதனை வேதாகம நெறிப்படி, சிவாசாரியர் செய்ய வேண்டும். வழிபட வரும் பக்தர்கள் அரன் சிந்தனையே கொண்டு பிற சிந்தனைகளை மறந்து திருமுறைகளைப் பாடுதல் - சொல்லுதல் வேண்டும்; அல்லது அரன் நாமங்களைச் சொல்லுதல் வேண்டும்.

சிவாசாரியர்கள் மட்டுமின்றித் துறவியரும் வேதாகம நெறிப்படி இறைவைப் பூசித்தற்கு உரியவரேயாவர்.

"தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி"
- (திருவா. போற்றி.164, 165)

என்ற தொடர்களை மகுடமாகச் சொல்கிறோம். தென்னாட்டவர் துதிக்க உரிய சிவன் எந்நாட்டவரும் உரிய இறைவனாவார். தென்னாட்டவர் தென் மொழியிலும், அவ்வந் நாட்டவர் அவ்வம் மொழிகளிலும் துதிசெய்ய - தோத்தரிக்க ஆகமத்தில் விதியுள்ளது. எந்நாட்டவர்க்கும் சிவனே இறைவன் என்பதால், எந்நாட்டவர்க்கும் பொது மொழியாக நம் சமயம் விதித்துள்ள - இறைமொழியில் வழிபாட்டுக் கிரியைகளைச் செய்ய வேண்டும். 'ஆகமம் ஆகி என்று அண்ணிப்பான் தாள் வாழ்க' என்ற திருவாசகத் தொடரை உரக்க முழக்கம் செய்துவிட்டு அவ்வாகம விதிக்கெதிரான சதிசெய்பவர்களை என்னவென்று சொல்வது.

தமிழ் வேதங்கள் இருந்தன. அவை மறைந்தன. மறைந்தவற்றிலிருந்து தோன்றியவை வடமொழி வேதங்கள் என்றெல்லாம் எழுதப்பெறுவன கற்பனை வாதங்கள். பல நல்லறிஞர்களால் பலமுறை மறுக்கப்பட்ட பின்பும், மறுப்பைக் காணாமல் கேளாமல் மீண்டும் மீண்டும் சொன்னவற்றையே சொல்லுவது நன்றன்று. எந்தவொரு சமயமும் தன் மூல முதல் நூலை எந்த நிலையிலும் இழக்காது. எத்தகைய நிர்ப்பந்தத்தாலும் இழப்பை ஏற்படுத்த முடியாது. வேதமே மறைந்திருந்தால் - மொழி மாற்றப்பட்டிருந்தால் உலக வரலாற்றில் குறிக்கத்தக்க அவ்வளவு பெரிய அசாதாரண நிகழ்ச்சியைப் பின்னர் வந்த கவிஞர்கள் கதறிக் கதறிப் பதிவு செய்திருப்பார்களே!? நடக்காத கதையைச் சொல்லி நம்மை நாமே ஏன் தாழ்த்திக்கொள்ள வேண்டும்?

காலில் முள் குத்தினால் காலுக்கு மட்டும் துன்பம் என்பதில்லை. கண்களில் நீர் வரும்; ஒட்டுமொத்த உடம்பையுமே அசௌகரியப்படுத்திவிடும். திருமுறைகள் காட்டிய மறைவழியைத் திருமுறைகளைக் கொண்டே கிரியைகள் செய்து கொச்சைப்படுத்தும் செயல்களை, எங்கோ சிலர்தானே செய்கிறார்கள்; அதைப் பொருட்படுத்த வேண்டாமே எனச் சிலர் கருதக்கூடும். பேருருவுடைய நம் உயிர்ச் சைவ சமயத்தின் பேரால் செய்யப்படும் அந்த, மரபுப் பிறழ்ச்சி முள் குத்துவது போன்றது. சைவ சமயப் பேருருவில் அங்கங்களான சைவர்கள் அனைவரையுமே அத்தீச்செயல் அசௌகரியப்படுத்திவிடும். ஆகவே அந்த முட்களை தூக்கித் தூர எறிந்து, திருமுறைப் பெருமைகளை நாம் காத்தாக வேண்டும்.

'காத்தாள்பவர் காவல் இகந்தால்' சமயம் கறைபட்டுப்போகும். சைவத்திற்குக் காத்தாள்பவர் உள்ளனர். பதினெட்டு ஆதீனங்கள், சைவம் காக்கத் தோன்றியவை. அவ்வாதீனங்களில் சிலவற்றுக்குத் தக்க வாரிசுகள் கிடைக்காத நிலையும் உள்ளது. இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்டு, தண்டல்காரர்கள் புறப்படுகின்றனர். இறைவனின் திருவருளால், பதினெண் ஆதீனங்களில் சிலபல ஆதீனகர்த்தர்களாகிய காத்தாள்பவர்கள், பிறர் பிறர் செய்யும் மரபுப் பிறழ்ச்சிகளை அனுமதிக்காமல் வேத நெறிச் சைவத்தைக் காத்தாளும் கடமையைச் செய்து கொண்டுதான் உள்ளனர். ஆசாரிய பீடங்களில் உள்ள அவர்களை மதியாமல் ஒதுக்கினால், தத்தம் பிழைகளைப் - பிழைப்புகளைக் கூச்சமின்றிச் செயற்படுத்தலாம் என்று மரபுப் பிறழ்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.

திருமுறைகளைக் கும்பாபிஷேகக் கிரியைகளுக்கும், திருக்கோயில் வழிபாட்டுக் கிரியைகளுக்கும், திருமணம் முதலிய வாழ்வியல் கிரியைகட்கும் பயன்படுத்துபவர்கள் திர்முறைகளின் உயர் தரத்தைக் குறைப்பவர்களே ஆவர். அவர்களிடம் திருக்கோயில்களில் குடமுழுக்கு, இல்லறத்தில் திருமணம் போன்ற கிரியைகள் செய்ய வேண்டுமென்று விதிக்கும் விதிநூல் உண்டா? திருமுறைகளால் கிரியைகள் செய்வதற்கு, ஆட்சி உண்டா? ஆவணம் உண்டா? முன்னோர்களாகிய சான்றோர்களின் சாட்சி உண்டா? என்ற நம் வினாக்களுக்குப் பதிலில்லாமையால், சொல்ல முடியாமல் தவிப்பவர்கள் எத்திறத்தாலும் திருந்தாதவர்களாக உள்ளனர். சென்ற நூற்றாண்டில் தோன்றிய வேத மறுப்புச் செய்திகள் மறுக்கப்பட்டவை. திருமுறைச் சடங்குகளுக்கு அவைகள் விடைகள் ஆகா என்பதும் அவர்களுக்குப் புரியவில்லை.

சமயம், சமயச் சடங்குகளில் நம்பிக்கை என்பதே சமயியின் முதல் தகுதி. வேதாகம முறைப்படியே திருக்கோயில் பூசனைகள், நடைபெற வேண்டும்; அவ்வாறே தொன்றுதொட்டு நடந்தன. படைப்புக் காலம் தொட்டுச் சைவத்தின் கோட்பாடுகளும், நியதியும், நடைமுறையும் இவையே என்பதற்கான மிகப்பல ஆட்சிகள், ஆவணங்கள், சமயாசாரியர், சந்தானாச்சாரியர்கள், சமயச் சான்றோர்களின் திருவாக்குகள் ஆகியவற்றை காசிமடம் எழுதிய நூல்களில் தந்துள்ளார்கள். தொடர்ந்து நம் ஸ்ரீகுமரகுருபர திங்களிதழில் மெய்யுரை, வைதிகச் சைவம் ஆகிய தொடர்களில் தெரிவித்து வருகிறார்கள். அவற்றைக் கற்றுத் தெளிந்து மிகப் பலர், திருமுறைகள் போற்றும் நான்மறைச் சைவச் செந்நெறியில் பிடிப்புக்கொண்டுள்ளமை பரம்பொருளின் கருணையினாலேயே ஆகும்.

"........................ - வீழ்த்த 
புறநெறி ஆற்றாது அறநெறி போற்றி 
நெறிநின்று ஒழுகுதிர் மன்ற 
துறை அறி மாந்தர்க்குச் சூழ்கடன் இதுவே"

என்றருளிய நம் ஆதி முன்னவராகிய ஸ்ரீ குமரகுருபர சுவாமிகளின் அறவுரை முழுமையாக வென்றேறும்.


நன்றி : http://www.shaivam.org

வேதம் என்றால் வடமொழி வேதத்தையே குறிக்கும் என்பது ஏன்?


இனச்சுட்டு - இனம் காட்டும் சுட்டு; இரண்டும் பலவும் இருந்தால் ஒன்றை அடையாளப்படுத்தும் சுட்டு.

ஞாயிறு என உதிப்பது ஒன்றுதான். அது தரும் வெயிலை, ஞாயிற்று வெயில் என்றாலே போதும். திங்கள் என உதிப்பது ஒன்றுதான். அது தரும் நிலவை, திங்கள் நிலவு என்றாலே போதும். ஒன்றே ஒன்றாக இருப்பவற்றிற்கு இனம் காட்டும் சுட்டு, பேச்சு வழக்கில் தேவையில்லை. செய்யுள் வழக்கில் ஒன்றே ஒன்றானவற்றிற்கும் பண்புச் சொல்லை இனம் சுட்டும் வகையில் சொல்லலாம் என்று,

'இனச்சுட்டு இல்லாப் பண்புகொள் பெயர்க்கொடை
வழக்கு ஆறு அல்ல; செய்யுள் ஆறே'


என்ற நூற்பா வாயிலாகத் தொல்காப்பியர் தெரிவித்துள்ளார். இதற்கு உதாரணம் 'செஞ்ஞாயிற்று வெயில் வேண்டினும், வெண் திங்களின் நிலவு வேண்டினும்' என்ற செய்யுள் தொடர். இதில், கரு ஞாயிறு என வேறொரு ஞாயிறோ, கருந்திங்கள் என வேறொரு திங்களோ இல்லையென்றாலும், 'செஞ்ஞாயிறு' என்றும், 'வெண்திங்கள்' என்றும் இனங்காட்டும் பண்படை வருகிறது.


மொழியால் இனஞ்சுட்டுதலும் உண்டு, மொழி, பண்பன்றெனினும் இனம் சுட்டத் தேவைப்படும். தண்டியார் என வடமொழிப் புலவர் ஒருவர்; தண்டியார் எனத் தமிழ்ப் புலவர் ஒருவர். இருவரும் ஒருவரே என்ற ஆய்வும் உண்டு. வடமொழியில் தண்டியார் செய்த நூல் 'காவ்யாதர்கம்' தமிழில் தண்டியார் செய்த நூல், ஆக்கியோன் பெயரால் தண்டியலங்காரம் எனப்படுகிறது. இரண்டும் அணி இலக்கண நூல்கள். தமிழில் உள்ள தண்டியலங்காரப் பாடலை, மேற்கோள் சொல்லும்போது, 'என்றார் தமிழ்த் தண்டியார்' என மொழிப் பெயரை இனம் சுட்டும் சொல்லாகச் சேர்த்துச் சொல்கிறோம்.

தமிழில் நான்மறை, வடமொழியில் நான்மறை என இரண்டு இருக்குமானால், மொழிப் பெயரைச் சேர்த்து இனம் சுட்டாவிட்டால், எந்த மொழியின் நான்மறை எனக் குழப்பம் ஏற்படும். தமிழில் எக்காலத்தும் நான்மறை - வேதம் இன்மையால், வடமொழியில் மட்டுமே நான்மறை - வேதம் உள்ளமையால் நம் முன்னோர் நான்மறை - வேதம் எனப் பொதுவாகவே குறிப்பிட்டனர்.

'அந்தணர் மறை' என்பதில் உள்ள அந்தணர் என்பது அடையாளப்படுத்துகின்ற இனச்சுட்டு ஆகாதா? என ஒரு வினா வரலாம். 'இந்தப் பெரியபுராணம் என்னுடையது' என்று ஒரு நூல் பிரதியைச் சுட்டிக்காட்டும்போது, பயன்பாட்டினால் உள்ள உரிமையை அடையாளப்படுத்துகிறோம். பயணங்களின்போது முன் பதிவு செய்த இடத்தை 'இது என் இடம்' என்கிறோமே அதைப்போல, குலத் தொழில்கள் ஆறனுள் ஒன்றாக வேதம் ஓதுதல், அத்யயனம் செய்தல் உரிமை பற்றிய சிறப்பு அடையே 'அந்தணர் மறை' என்பது. அந்த அடையில் அந்தணர்க்கு மட்டுமே உரிமையுடையது என்ற குறிப்பும் இல்லை. எனவே இது பயன்பாடு தொடர்பான அடைவே அன்றி இனச்சுட்டு ஆகாது.

எனவே, நான்மறை என்பதற்கும் வேதம் என்பதற்கும் மொழி குறித்த இனச்சுட்டு யாண்டும் இன்மையால் தமிழில் நான்மறை இருந்ததில்லை என உணர்க.

வேத காலம் - சைவத்தின் கொள்கை என்ன?

வேத காலம், தொல்காப்பியர் காலத்திற்குச் சில பல நூற்றாண்டுகட்கு முற்பட்டது எனச் சொல்லுவதுகூட, நம் சமய மரபுக்குப் புறகாகும். அநாதி காலத்தில் பெருமான் வேதம் அருளினார். ஒவ்வொரு யுகத் தொடக்கத்திலும் மீண்டும் மீண்டும் அவ்வவ்யுகங்களுக்கும் தருகிறார் என்பதே அனைத்துப் புராணங்களிலும் சூதர் அருளிய செய்தியாகும். திருவிளையாடற் புராணத்தில், வேதத்துக்குப் பொருள் அருளிச்செய்த படலத்தில், பெருமான், ஓரூழியை ஒடுக்கிப் பிறிதோரூழியை மலர்த்திய நிகழ்ச்சி கூறப்பட்டுள்ளது. புது ஊழியில் மீண்டும் பெருமான் திருவாக்கிலிருந்து ‘பிரணவம் உதித்து, அதனிடை வேதம் பிறந்தன’ (செ.4) என வருகிறது. இதுவே நம் சமயம் சொல்லும் வேதகாலமாகும். வேதாகமங்கள் என்றும் உள்ளவை. அவற்றின் பூசனைகள், சடங்குகள், கிரியைகள் மூலமான மையக் கோட்பாட்டினின்றும் பிறழ்வதில்லை.

இறைவன் வேதத்திற்குத் துணையாக ஆறு அங்கங்களையும் தோற்றுவித்தார். அனைத்தின் மூலங்களும் பெருமானின் அருளிப்பாடுகளே. வியாசர் நெறிப்படுத்துதலாகிய தொகுப்பு முறை செய்தார். வியாசரைப் பெருமைப்படுத்த - அப்பணி செய்ய - பெருமான் அவருக்கு அருள்பாலித்தார். பெருமான் அருளிய அதி நுட்ப மந்திரங்கள் முதலியவற்றுடன், அவர்தம் அருளாரமுதத்தில் ஊறித் திளைத்த இருடிகள் முதலாயினோரின் படையல்களையும் இணைத்து வகுத்ததில் வேத நுட்பங்கள் சற்றே இளகின. வேதங்களின் உண்மைப் பொருள் இறைவனால் மட்டுமே தரக்கூடியவை என்பதற்கான சான்றுகளை காசிமட நூல்களில் தந்துள்ளார்கள்.


நன்றி : http://www.shaivam.org

உண்மையான சைவர்கள் கடைபிடிக்கவேண்டிய நெறி



நமக்குக் கற்பிக்கப்பெற்றவை

சைவத்தின் தலைமைச் சான்றுகள் இவையிவை என காசிமடம் ‘மெய்யும் பொய்யும்’ நூலுள் அறிவித்துள்ளது. சமய ஊற்றத்துடன் வேதம், திருமுறைகள் படித்தவர்கள் சொல்வதைத்தான் நாம் பரிசீலிக்க முடியும். பரம நாத்திகர்களுள் சிலர், வேதம் படித்தவர்கள். ‘முல்லர், வேதம் படித்தார். வேதம் அவரைப் பிழை செய்ய விடாது’ என்பது வேத சக்தியின்மேல் உள்ள நம்பிக்கையைக் காட்ட உதவுமே தவிர, பக்தியும், சமய ஊற்றமும், நம்பிக்கையும் இல்லாதவர்களுக்கு வேதசக்தி நலம் செய்யாது. அந்தத் துரைமார்கள் அதையும் இதையும் சொல்லி, சாதிகளால், மொழியால் இவையொத்த உணர்ச்சி வசப்பட வைக்கும் பொருண்மைகளால் பிரித்த பிரிப்புகள் மாபெரும் வெற்றியடைந்து இன்னமும் தொடர்ந்து கொண்டுள்ளன. சமயம் என்று வரும்போது கடைசிவரை அவர்கள், அவர்களாகத்தான் இருந்தார்கள். அது ஏன் என்று நாம் சிந்திப்பதே இல்லை. விவிலியத்தின் பழையஏற்பாட்டை, நம்பிக்கையின்றிப் பக்தியின்றிச் சீண்டினால் விளைவு என்னவாகும்? பிரிவுகளுக்காகவும் பிணக்குகளுக்காகவும் மேற்கொள்ளப்படுவன நம்பிக்கைகளிலிருந்து நம்மை நகர்த்திவிடும்.

மொழி பற்றித் தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள்; சமயம் பற்றி, வழிபாடுகள் பற்றி, சடங்குகள் பற்றி, நெறிமுறைகள் பற்றித் திருமுறைகள், சாத்திரங்கள் - அருளாளர்களின் இலக்கியங்கள் ஆகியவற்றுக்கு மேலாக நமக்கு யாரும் எதுவும் சொல்லிக்கொடுக்கத் தேவையில்லை.

எங்களுக்கு எந்த மொழியின் பேரிலும் என்றைக்கும் வெறுப்பில்லை. வடமொழி இனிப்பா? தமிழ்மொழி இனிப்பா? திருமுறை இனிப்பா? வேதம் இனிப்பா? என்ற ஆராய்ச்சிகளும் எங்களுக்கு இல்லை. எதுவொன்றையும் கசப்பு என்று சொல்வது மில்லை. இறைவன் அருளிய மொழிகள், இறைவன் அருளிய வேதாகமங்கள், இறைவன் உள்நின்று உணர்த்த வெளிப்பட்ட தேவார - திருமுறைகள், திருவருட் சம்மதத்துடன் அமைந்த, சாத்திரங்கள், சமய இலக்கியங்கள் இவற்றில் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்.

தேவகாரியங்களுக்காக வகுக்கப்பட்டதால் வடமொழி தேவபாஷை - என்றால் அதனால் தமிழின் சமத்துவ ஏற்றம் குறைவுபடாது. தெய்வபாஷை - தெய்வத்தினால் அருளப்பட்டது எனக் கொண்டால் தமிழும் தெய்வபாஷையே ஆகும்.

“ஆரியமும் தமிழும் உடனே சொல்லிக்
காரிகை யார்க்கும் கருணை செய்தானே” - திருமந்திரம் - 65.

ஆசாரியன் யார்?

நம் தமிழ் நூல்களில் தற்போது கிடைக்கும் முதன்மை நூல் தொல்காப்பியம் ஆகும். அதன் பாயிரம், அதங்கோட்டாசான் என்ற தமிழறிஞரை, ‘நான்மறை முற்றிய அதங்கோட்டாசான்” என்கிறது. உலகப் பொதுமறை எனப் போற்றப்பெறும் திருக்குறள், வேதங்களை, ‘அந்தணர் நூல்’ என்றும், ‘ஓத்து’ என்றும், ‘அறு தொழிலோர் நூல்’ என்றும் சுட்டுகிறது. நம் பன்னிரு திருமுறைகள் சற்றொப்ப 1600 இடங்களில் வேதங்களை, அகமங்களைச் சிறப்பித்து உரைத்து, வேதங்கலை அருளியவர் நம்பெருமான் என்றும், அவர் வேதம் பாடுபவர் என்றும், வேத வடிவினர் என்றும் பலவாறாக விதப்பித்துப் புகழ்கின்றன. அவற்றுள் ‘வேதமோடாகமம் மெய்யாம் இறைவன் நூல்’ என்றும், ‘வேதத்தை விட்ட அறம் இல்லை’ என்றும் திருமந்திரம் முத்தாய்ப்பாக அறிவிக்கும் செய்திகள் பெரிதும் உளங்கொள்ளத் தக்கனவாகும்.

நால்வர் நெறியும், நால்வர் நெறியை உள்ளிட்ட திருமுறைகளின் நெறியும், சந்தானாசாரியர் நெறியும், தொகுமொத்தச் சைவத் தமிழ் நூல்கள் அனைத்தின் நெறியும் வேத நெறியே ஆகும். இவ்வனைத்திற்கும் முரண்பட்டு, முரண்டு பிடித்து, நாம் பின்பற்றுவதற்காகத் திருமுறைகள் சுட்டிக்காட்டும் வேதாகம நெறிக்கு விரோதமாக, அத்திருமுறைகளையே வைத்துப் புதுநெறி என்பதாகப் புறநெறி செய்கிறார்களே, அது நிச்சயமாக வேறொரு சமயமே ஆகும். அது சிவநெறிக்கு விரோதச் சமயமே ஆகும்.

நால்வர் காட்டிய வேதாகம நெறிக்கு நால்வர் பெருமக்களே ஆசாரியர்கள். அதற்கு முரணான நெறிக்கு நால்வர் பெருமக்கள் ஆசாரியர் ஆகார்.

ஆசாரியன் இல்லாமல் ஒரு நெறி உருவாக முடியாது; கூடாது. வேதாகம நெறிக்குப் புறம்பான இந்த முரண் சமயத்திற்கு ஆசாரியன் யார்? ஆசாரியன் இல்லையென்றால் அது தான்தோன்றியா? ஆசாரியன் இல்லாத அநாதையா?

வேதம் கற்க வேண்டுமா?

வேதம் கற்க வேண்டுமென்று நாம் சைவர்கள் யாரையும் வற்புறுத்துவதில்லை. வேதநிந்தனை கூடாது என்று நம் முன்னோர்கள் அறிவித்ததையும், வேத நிந்தனையே சைவ நிந்தனை, சிவ நிந்தனை என்ற சைவக் கோட்பாட்டையுமே தெரிவிக்கிறோம். வேத பாராயணத்துக்கும் எமக்கும் உள்ள தொடர்பு பற்றி நாம் பிறருக்குத் தெரிவிக்க வேண்டியதில்லை.

சதுர்வேதமும் கனாந்தரம் அத்யயனம் செய்தவர்களே தமக்கு வேதம் தெரியும் என்பதைக் கூசித்தான் பேசுவர். வேதம் என்ற சொல் சதுர்வேதத்தையும் உள்ளடக்கியது. வேதம் தெரியும் என்றால் சதுர்வேதமும் அத்யயனம் செய்வதாக அர்த்தப்படும். இந்தியத்தில் நூற்றுக்கும் குறைவானவர்களே சதுர்வேத பண்டிதர்களாக உள்ளனர்.

நாம் வற்புறுத்துவதெல்லாம் நமது சமயாசாரியர்கள் அருளியுள்ளபடி, திருமுறைகளை ஓதுங்கள், படியுங்கள் என்பதையே ஆகும். கோயிலில் வழிபாடுகள், இல்லச் சடங்குகள் வேதாகம முறைப்படியே நடைபெற வேண்டும் என்பதே ஆசாரியப் பெருமக்களின் அருளிப்பாடு. அதுவே சைவத்தின் தொன்றுதொட்ட மரபு. திருக்கோயில்களிலும், இல்லச் சடங்குகளிலும் ஓதுவாமூர்த்திகளைக் கொண்டு பெருமளவுக்குத் திருமுறைகளைப் பண்ணொன்ற ஓதுவித்தும் கேட்டும் பயன்பெறுக! பிழையின்றிப் படிக்கத் தெரிந்தவர்கள் நாளும் திருமுறைப் பாராயணம் செய்து இகபர சௌபாக்யம் அடைவிராகுக!

- திருச்சிற்றம்பலம் -

நன்றி : http://www.shaivam.org

01/07/2012

(அஞ்சலி என்பது இதுதான்)எம்.ஜி.ஆர். அவர்களுக்கு ஈழத்தமிழரின் அஞ்சலி

1987 ஆண்டு அது. அண்ணா தொழிலகம் என்ற உள்ளூர் உற்பத்தி நிறுவனத்தின் பற்பொடி தயாரிக்கும் களஞ்சியத்தின் தூசு பரவிய அறைக்குள் இருநூறு பேருக்கு மேல் அடைந்து கிடைக்கிறோம். அதுதான் எமக்கு அப்போது வாய்த்த தற்காலிக அகதி முகாம். பலர் கோயில்களுக்குச் சென்று அடைக்கலமாகி விட்டாலும், இந்த அண்ணா தொழிலகத்தின் நான்கு அடுக்கு மாடிக்கட்டடத்தின் கீழ் அறையில் ஒளிந்திருந்த எமக்கு இருந்த ஒரே அற்ப நம்பிக்கை தூரத்தில் இருந்து வரும் எம பாணம் எம்மைத் தாக்காது என்பது தான்.

தூரத்தில் இருந்து பாய்ந்து வரும் ஷெல் கணைகள் எங்கோ ஒரு மூலையில் குத்தி வெடிக்கும் ஓசை தொடந்து ஒலிக்கிறது. மாரிகாலம் தொடக்கி வைத்த பெருமழைச் சத்ததுக்கு மேலாக ஷெல் மழை ஓசை எல்லாப் பக்கமும் கேட்கிறது. அது வேறென்றுமில்லை காங்கேசன் துறை வீதிப்பக்கமாக நகர்ந்து வரும் இந்திய அமைதிப்படையினரின் முன்னெடுப்பின் கட்டியம் தான். அவர்கள் காங்கேசன் துறையில் இருந்து ஒரு அணியாகவும், பலாலிப்பக்கம் இருந்து இன்னொரு அணியாகவும் பிரிந்து வந்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு முதல் தேவை முன்னே எதிர்ப்படும் எல்லாம் நாசமாகிப் போக வேண்டும். அதற்கு மேலால் தான் செயின் புளாக்குகள் எனப்படும் சுடுகலன்கள் பொருத்திய இராணுவ வண்டிகள் பாய்ந்து வரும். எல்லாப் பக்கமும் தன் கழுத்தைத் திருப்பி அந்த செயின் புளாக்குள் எறிகணைகளை ஏவிக் கொண்டே இன்னும் முன்னே முன்னே நகர்கின்றன.அந்தப் படையணிக்கும் சரி, பாய்ந்து வரும் ஏவுகணைகளுக்கும் சரி கிளியர் ஆக வேண்டிய முன்னால் எதிர்ப்படும் கிராமங்கள் எல்லாமே புலிகள் தான். அதுக்கு ஆறு மாசக் குழந்தையும் சரி அறுபது வயது கிழவனும் சரி எல்லாம் ஒன்று தான்.


"என்ரை பிள்ளையார்க் கிழவா! என்னைக் காப்பாற்று", பக்கத்து வீட்டுக்கார அன்ரி பெரும் குரலெடுத்து அழுகிறா. எனக்கு இரண்டு வயசு மூத்த பாலகுமார் முன்னால் மாட்டியிருக்கும் அம்மனின் படத்தையும், சாயிபாபா படத்தையும் மாறி மாறி நடுங்கிக் கொண்டே தொட்டுத் தொட்டு "தாயே....தாயே" என்று புலம்புகிறான்.


எல்லாரையும் பார்க்கையில் எனக்கு பயம் இன்னும் இரண்டு மடங்கு, மூன்று மடங்காக எகிறுகிறது. அம்மாவின் நைலெக்ஸ் சீலையில் என்னுடைய கண்ணீர்த் துளிகள் தொப்பு தொப்பாக விழ அவரின் கையைப் பிடித்துக் கொள்கிறேன் பயத்தோடு. அம்மாவின் வாயில் எல்லாத் தேவாரங்களும் ஒழுங்கில்லாமல் அவசரகதியில் புலம்பலாக வருகின்றன.ஒன்று இரண்டாக ஆரம்பித்த அழுகுரல்கள் இப்போது ஒட்டுமொத்தமாக அந்தப் பற்பொடி அறையையே ஆக்கிரமிக்கிறது. ஏனென்றால், கிட்ட கிட்ட ஏவுகணை ஒலி கேட்குதே.


தொப்புள் கொடி உறவாக, கண்ணுக்குத் தெரியாத உறவுப்பாலத்தைப் போட்டு வைத்து ஒரு தாய் மக்கள் போல் பழகி அது நாள் வரை இருந்த இந்திய -ஈழ உறவை சிங்கள அரசியல் சாணக்கியம் விழுங்கி ஏப்பம் விட்டதன் அறுவடையின் பலனை அனுபவித்துக் கொண்டிருந்தோம். ஒபரேஷன் பூமாலை மூலம் சாப்பாட்டுப் பொதி போட்டு சில மாதங்களில் வாய்க்கரிசியும் அவர்களாலேயே போடப்படுகிறது.


மெல்ல மெல்ல அந்த ஏவுகணை மழை ஓய ஆரம்பிக்க, இருட்டுக் கட்டுகிறது வானம். அந்த இடைவெளியில் நாங்கள் இருந்த அகதி முகாமின் முற்றத்துக்குப் போய் இரவுக்குத் தேவையான கஞ்சியைத் தயார்படுத்த ஒரு கூட்டம் தயாராகிறது. இன்னொரு கூட்டம் றேடியோவில் பற்றறி போட்டு "ஆகாசவாணி" கேட்கத் தயாராகிறது. வானொலியைச் சுற்றி நின்ற பெரியவர்கள் எல்லோரதும் அப்போதைய ஒரே நம்பிக்கை"எம்.ஜி.ஆர் விடமாட்டார், ஏதாவது செய்வார்".


00000000000000000000000000000000000000000000000000000000


ஈழ விடுதலைப் போராட்டத்தின் தார்ப்பரியத்தை உணர்ந்து அதற்கு ஆதரவளித்த நாள் முதல் தான் இறக்கும் வரை இதய சுத்தியோடு செயற்பட்ட ஒரே தமிழினத் தலைவர் எம்.ஜி.ஆர் தான் என்பதை 22 வருஷங்கள் கழித்தும் இன்றும் நிரூபிக்கக் கூடியதாக இருக்கிறது இன்றைய அரசியல் களமும், தமிழீனத் தலைவர்கள் சொல்லும் காலத்துக்குக் காலம் உதிக்கும் வேதாந்தங்களும்.


தமிழக டி.ஜி.பி ஆக இருந்த கே.மோகன்தாஸ் எழுதிய "எம்.ஜி.ஆர் நிஜமும் நிழலும்" நூலை வெகு காலம் முன்னர் படித்திருந்தேன். அதில் போலீஸ்துறையில் தான் பணியாற்றிய காலத்தில் நடந்த அரசியல் நிகழ்வுகளை வரலாற்றுப் பதிவாக்கியிருந்தார். குறிப்பாக எண்பதுகளில் தமிழகத்தில் நிலை கொண்டிருந்த போராளி இயக்கங்களின் நடவடிக்கைகளும், அதனை எம்.ஜி.ஆர் அரசு நோக்கிய விதத்தையும் பல பக்கங்களில் சொல்லிக் கொண்டே போகிறார். குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம், தேசியத்தலைவர் பிரபாகரன் மீது எம்.ஜி.ஆர் கொண்ட நம்பிக்கை என்பனவெல்லாம் குறித்த சம்பவங்களோடு விரிகின்றன.


00000000000000000000000000000000000000000000000000000000


இந்திரா காந்தி இறந்த அந்த நாள் எங்களூரில் அப்பிக் கொண்ட சோகத்தைச் சிறுவனாகப் பார்த்த எனக்கு எம்ஜிஆரின் பிரிவைக் கேட்ட போது துடிதுடித்த எங்களவர் இன்னும் கண்ணுக்குள் நிக்கிறார்கள். இந்திய அமைதிப்படையின் ஒபரேஷன் பவான் என்ற தொடர் அவலம் நடந்து கொண்டிருந்த காலத்தில் தான் எம்.ஜி.ஆரின் உடல் நலம் குன்றி நிரந்தரமாகப் பிரிந்தது எமது இனத்துக்கு இன்னும் சாபக்கேடு ஓயவில்லை என்று சொல்லாமல் சொல்லியது. இன்றும் எம்ஜிஆரைப் பெரு மதிப்போடு நெஞ்சில் வைத்துப் போற்றக் காரணம், அவர் அரசியலைக் கடந்து இதயசுத்தியோடு எமது போராட்டத்தைப் பார்த்தது மட்டும் தான். அதை இன்றைய அரசியல் விபச்சாரிகளிடம்/சந்தர்ப்பவாதிகளிடம் எதிர்பார்ப்பவன் முட்டாள் என்று சொல்லித் தெரிவதில்லை.


எம்ஜிஆர் என்ற தமிழகத் தலைவனோடு ஈழத்தமிழினத்துக்கு இருந்த ஒரே நம்பிக்கையும் தொலைந்து போனாலும் உங்களை மறவோம்.



------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


எம்.ஜி.ஆர் அவர்களுக்கு ஈழத்தமிழர் வழங்கும் இதயப்பூர்வமான அஞ்சலி


"மடத்துவாசல் பிள்ளையாரடி"தளத்தில்ருந்து


இவ்வஞ்சலி இந்தியத்தமிழர்களான நாம் கைகழுவிவிட்ட நமது கடமையையும்,


தமிழின்பெயரால் தமிழனைத்தின்று பிழைப்புநடத்தும் துரோகிகளை தலைவர்களாக போற்றும் நமது மடத்தனத்தையும்,சுயநலப்போக்கையும்,


ஒரு தலைவன் மறைந்தாலும் எப்படி மக்கள்மனதில் வாழ்கிறான் என்பதையும் தெளிவாகக் காட்டுகிறது.

25/05/2012

மனுஸ்மிருதி,திருக்குறள்-ஓர் ஒப்பீடு

 

ஆரியன் என்றால் உயர்ந்தவன், மேன்மையான தர்மநெறியில் வாழ்பவன். வேதம் முதற்கொண்டு திருக்குறள்,திருமந்திரம் என அனைத்து நூல்களும் கூறும் நன்னெறியே உயர்ந்த வாழ்வியல் நெறி. யார் அவற்றைப் பேணி வாழ்கின்றனரோ அவரே ஆரியர் ஆகவே அவ்வறத்தைக் கைக்கொண்டு வாழும் தமிழர் அனைவரும் ஆரியரே!

ஊர் ஒற்றுமையாய் இருக்கவேண்டும் என்று அவ்வூரின் முன்னேற்றத்தை விரும்புவோர் நினைப்பது இயல்பு. கூத்தாடிகளுக்கு ஊர் இரண்டுபட்டால்தானே கொண்டாட்டம். நாமும் அதுபோல தமிழும் ஆரியமும் வேறல்ல ஒன்றுதான் எனும் உண்மையைத் தெளிவுறுத்துகின்றோம், ஆனால் குழப்பவாதிகளின் கருத்துகளுக்கு நமது தமிழன்பர்கள் சிலரும் பலியாகி அவர்களது ஊதுகுழலாகிவிட்டனர் அதுதான் வருத்தமாக இருக்கிறது.

சரி விஷயத்துக்கு வருவோம், இங்கு நாம், (உள்நோக்கத்துடன்) தவறாகப்புரிந்துகொள்ளப்பட்ட மனுசாஸ்திரத்துக்கும் திருக்குறளுக்கும் உள்ள ஒற்றுமைகள் பலவற்றைப் பார்ப்போம்.

வேதத்தைக் கற்பது, வேதத்தைக் கற்பிப்பது; யாகம் செய்வது, யாகங்களைச் செய்விப்பது; தானம் வாங்குவது, தானம் செய்வது – என்ற ஆறு ‘தொழில்கள்’ பிராமணனுக்கு விதிக்கப்பட்டுள்ளன.

இதைக் கூறுகிற மனு ஸ்ம்ருதி வாசகம் இது :

அத்யாபனம் அத்யயனம்
யஜனம் யாஜனம் ததா
தானம் ப்ரதிக்ரஹ ஸ்சைவ
ஷட் கர்மாண்யக்ரஜன்மன:
(75/467)



திருக்குறள்

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்.


உரை:
காவலன் காவான் எனின் – காத்தற்குரிய அரசன் உயிர்களைக் காவான் ஆயின்;
ஆபயன் குன்றும் – அறன் இல்லாத அவன் நாட்டுப் பசுக்களும் பால் குன்றும்;
அறுதொழிலோர் நூல் மறப்பர் – அந்தணரும் நூல்களை மறந்துவிடுவர்.
ஆபயன் – ஆவால் கொள்ளும் பயன்,
அறுதொழில்களாவன (வேதம்) ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என இவை.


திருக்குறள்

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.


மனுஸ்மிருதி

இத்யேதி: கர்மபிர்வ்யஸ்தா
த்விஜா வர்ணாந்தரம் கத:
தர்மோ யக்ஞ்யக்ரியா தேஷாம்
நித்யம் ந ப்ரதிஷித்யதே


பொருள்

பிராமணர்களே தங்கள் நியமங்களைக் கைவிட்டதால், வெவ்வேறு செயல்முறைகளை மேற்கொண்டு, மற்ற மூன்று வர்ணங்களைச் சார்ந்தவர்கள் ஆனார்கள்.

மனுஸ்மிருதி

சூத்ரோ ப்ராம்மணதாமேதி
ப்ராம்மணஸ்சைதி சூத்ரதாம்
க்ஷத்ரியாஜ்ஜாதமேவம் து
வித்யாத் வைச்யாத் ததைவ ச

பொருள்

சூத்திரன் பிராமணன் ஆகலாம்; பிராமணனும் சூத்திரன் ஆகலாம்; அதேபோல, க்ஷத்ரிய மற்றும் வைச்ய வகைகளைச் சார்ந்தவர்களின் மகன்களும், வேறு வர்ணத்தை அடையலாம்.

மனுஸ்மிருதி

கோரக்ஷகான் வாணிஜிகாம்ஸ்ததா
காருகுசீலவான்
ப்ரேஷ்யான் வார்துஷிகாம்ஸ்சைவ
விப்ரான் சூத்ர வதாசரேத்

ஆடு, மாடுகளை வளர்த்துக்கொண்டும்; வர்த்தகம் செய்தும்; கை வேலை செய்பவர்களாகவும், நடிகர்கள் மற்றும் பாடகர்களாகவும், வட்டிக்குப் பணம் தருகிறவர்களாகவும் வாழ்கிற பிராமணர்கள், சூத்ரர்களாகவே கருதத்தக்கவர்கள்.

திருக்குறள்

மறப்பினும் ஓத்துக் கொளல் ஆகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்


உரை

ஓத்து மறப்பினும் கொளல் ஆகும் – கற்ற வேதத்தினை மறந்தானாயினும் அவ்வருணம் கெடாமையின், பின்னும் அஃது ஓதிக் கொள்ளலாம்; பார்ப்பான் பிறப்பு ஒழுக்கம் குன்றக்கெடும் – அந்தணனது உயர்ந்த வருணம் தன் ஒழுக்கம் குன்றக்கெடும்.
திருக்குறள்

சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை
 – 57

மனுஸ்மிருதி-9 : 12

பெண்களை வீட்டினுள் நம்பிக்கைக்குரிய காவலர்கள்மூலம் காத்துவைதிருத்தல் மூலம் அவரது ஒழுக்கத்தைக் காத்துவைத்திடமுடியாது. அவர்கள் தாமாகவே உறுதியுடன் தமது ஒழுக்கத்தைக் காத்துக்கொள்வதே சிறந்தது.
நிறைவுரை

வேதப் பொருளை விரகால் விரித்துலகோர்
ஓதத் தமிழால் உரைசெய்தார் – ஆதலால்
உள்ளுநர் உள்ளும் பொருளெல்லாம் உண்டென்ப
வள்ளுவர் வாய்மொழி மாட்டு.
– செயலூர்க் கொடுஞ்செங்கண்ணனார்


கற்கை நன்றே; கற்கை நன்றே;
பிச்சை புகினும் கற்கை நன்றே (35)


நாற்பால் குலத்தின் மேற்பால் ஒருவன்
கற்றிலன் ஆயின் கீழ் இருப்பவனே (37)

எக்குடிப் பிறப்பினும் யாவரே ஆயினும்
அக்குடியில் கற்றோரை ‘மேல்வருக‘ என்பர் (38)

கல்லா ஒருவன் குலநலம் பேசுதல்
நெல்லினுள் பிறந்த பதர் ஆகும்மே (36)

-அதிவீர ராம பாண்டியர் இயற்றிய வெற்றிவேற்கை என்னும் நறுந்தொகை

இவை யாவும் நமது முன்னோர்களான தமிழர்கள் நமது அற நெறி இது என்று சொல்லிவைத்த பாடல்கள். பலருக்கு ஜி.யு.போப் வகையறாக்கள் மட்டுமே தமிழர்களாகத் தெரிகின்றனர் போலும்