28/04/2015

இறைவணக்கம்


ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே

எல்லாம்வல்ல இறைவனின் அருளை வேண்டிக்கொண்டு,உலக மேம்பாட்டுக்காக என்னற்ற தியாகங்ககள் புரிந்த தியாகசீலர்களின் நினைவுகளைப் போற்றும் வகையில் இவ்வலைப்பூ உருவாக்கப்பட்டு காணிக்கையாக்கப்படுகிறது

இங்கு,எனது உள்ளங்கவர்ந்த கருத்துக்களை,எங்கு காணிணும் எடுத்துத் தொகுக்கிறேன்,இவை அத்தியாகச் சுடர்களை அலங்கரித்து வைக்கப்பட்ட வண்ணமலர்த் தொகுப்பாக இருக்கட்டும்

மலரும், இலையும்,நாரும் மனிதன் படைப்பு அல்ல ஆனால் மாலையைத் தான் படைத்ததாகக் கருதுகிறான்,நான் எனது எண்ணங்களுடன் எல்லோருடைய ஆக்கங்களையும் தொடுத்துக் கொண்டுள்ளேன்,குற்றமிருப்பினும் வாழ்த்துங்கள். கருத்துக்களை அலசுவோம்,கண்ட உண்மை வழிகாட்ட, வாழ்க்கைப் பாதையில் நடைபோடுவோம்

“எல்லோரும் இன்புற்றிருப்பதல்லால் வேரொன்றறியேன் பராபரமே”